முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 21 ஜனவரி 2026      இந்தியா
congress-office

புதுடெல்லி, பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை, நிதின் நபீன் தலைவரானது குறித்து காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம், சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலை முன்னிட்டு நீட்டிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவருக்கான தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியானது. அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக செயல்பட்டு வரும் நிதின் நபின் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், போட்டியின்றி தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக நிதின் நபீன் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி முறைப்படி அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து அவர் பா.ஜ.க. தேசிய தலைவராக பொறுப்பேற்று கொண்டார். 

இந்நிலையில் பா.ஜ.க.வில் தேர்தல் நடைமுறை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறும்போது, அமித்ஷாவும், பிரதமர் மோடியும் மட்டுமே முடிவுகளை எடுக்கிறார்கள். அதனை மீண்டும் நிரூபித்து இருக்கின்றனர். தேர்தல் இல்லை எனில் தேர்தல் அதிகாரிக்கு என்ன வேலை? நாங்களும் தேர்தல் நடத்தினோம். கார்கேவும், சசி தரூரும் வேட்பாளர்களாக இருந்தனர். வாக்குப்பதிவு நடந்தது. இதுவே ஜனநாயகம். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தொண்டர்கள் அனைவரின் பங்கையும் எடுத்து கொள்ள விரும்புகிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட கட்சியான பா.ஜ.க. சர்வாதிகார ஆட்சியை நோக்கி பயணிக்கிறது என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து