முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புத் தீர்மானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக இன்று (ஜன. 23) தமிழக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதாவை மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் மக்களவையில் கடந்த டிசம்பரில் அறிமுகம் செய்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய மசோதாவின்படி, ஓராண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் மீது நிதி சுமையை ஏற்றும் வகையில் இருப்பதாகவும், மகாத்மா காந்தி பெயர் நீக்குவதற்கும் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில், 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என வாக்குறுதி கொடுத்தீர்களா இல்லையா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய மு.க.ஸ்டாலின்,  வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜன. 23) சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார். "விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று இதுதொடர்பாக அரசின் சார்பில் ஒரு சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. எனவே தீர்மானத்தின் மீது விரிவாக பேசுவோம்" என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து