எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனனியின் 'பலூன்' பயணம் ஆரம்பமானது
ஜனனியின் 'பலூன்' பயணம் ஆரம்பமானது
ஜனனியின் 'பலூன்' பயணம் ஆரம்பமானது
சிறந்த கலைஞர்கள், திறம் படைத்த தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகிய இரண்டும் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு ஆணிவேராக செயல்படுகிறது. அப்படிப்பட்ட வலுவான கலைஞர்களை கொண்டு உருவாகி வரும் திரைப்படம் தான் '70 எம் எம்' நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் தயாரித்து வரும் பலூன். ஜெய் - அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் பலூன் திரைப்படமானது
அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உயர்த்தி கொண்டே வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா இந்த பலூன் திரைப்படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிவது பலூன் படத்திற்கு கூடுதல் பலம். இப்படி பல சுவாரசியங்களை உள்ளடக்கிய பலூன் படம் தற்போது நடிகை ஜனனியை படத்தின் மற்றொரு கதாநாயகியாக அறிவித்துள்ளது மேலும் சிறப்பு.
பலூன் திரைப்படத்திற்காக சென்னையில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "அனைவரையும் ஈர்க்க கூடிய கண்கள் தான் ஜனனியின் பலமே. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை தன்னுடைய கண்கள் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தக்கூடிய ஜனனி எங்களின் பலூன் படத்தின் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவரது பங்களிப்பு எங்களின் படத்திற்கு கூடுதல் மதிப்பை தரும் என பெரிதும் நம்புகிறோம். வணீக ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற தேவையான எல்லா சிறப்பம்சங்களையும் எங்களின் பலூன் திரைப்படத்தில் உள்ளடக்க முயற்சி செய்து வருகிறோம்..." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பலூன் படத்தின் இயக்குனர் சினிஷ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |