எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாவீரன் கிட்டு திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா
மாவீரன் கிட்டு திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா
மாவீரன் கிட்டு திரைப்படத்தின் First Look டீசர் வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நடைபெற்ற Licet Engenia கலைவிழாவில் வைத்து நடைபெற்றது. இப்படத்தின் First Look-ஐ இயக்குநர் சமுத்திரகனி வெளியிட படத்தின் டீசரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். படத்தின் First look மற்றும் டீசருக்கு கல்லூரியில் உள்ள அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. விழாவில் இயக்குநர் சுசீந்திரன், நாயகன் விஷ்ணு விஷால், நாயகி ஸ்ரீ திவ்யா, படத்தில் முக்கிய வேடமேற்று நடித்திருக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தயாரிப்பாளர் சந்திர சாமி, நடிகர் ஹரிஷ் உத்தமன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குநர் சமுத்திரகனி, பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசியது, நான் இயக்கிய, தயாரித்த 2 திரைப்படங்களின் First look மற்றும் டீசர்களை இங்கு தான் வெளியிட்டேன். அதை தொடர்ந்து இப்போது மீண்டும் நான் தயாரித்து இயக்கியுள்ள “ மாவீரன் கிட்டு “ திரைப்படத்தின் டீசரை இங்கு வைத்து வெளியிடுகிறேன். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ஏனென்றால் எனக்கு லயோலா கல்லூரி மிகவும் பிடித்த இடம். முதலில் என்னுடைய தந்தைக்கு நன்றி கூற வேண்டும் ஏனென்றால் அவர் மூலமாக தான் இப்படத்தின் தயாரிப்பாளர் சந்திர சாமி எனக்கு நண்பரானார். அழகர் சாமியின் குதிரை திரைப்படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது அதே போல் “ மாவீரன் கிட்டு “ திரைப்படத்துக்கும் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.
விழாவில் நாயகன் விஷ்ணு விஷால் பேசியது , எனக்கு லயோலா கல்லூரி மிகவும் பிடித்தமான இடம். சினிமாவில் உள்ள எல்லோருக்கும் லயோலா கல்லூரிக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும். எனக்கும் லயோலா கல்லூரிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் என்னுடைய மனைவி லயோலா கல்லூரியின் முன்னால் மாணவி ஆவார். நான் இப்படத்தின் மூலம் இயக்குநர் சுசீந்திரன் அவர்களுடன் மூன்றாவது படத்தில் இணைகிறேன். இப்படம் நிச்சயம் உங்கள் மனதை தொடும் ஒரு படமாக இருக்கும் என்றார்.
விழாவில் இயக்குநர் சமுத்திரகனி பேசியது , இப்படத்தின் First look போஸ்டரை பார்க்கும் போது எனக்கு மாபெரும் போராளி மாவீரன் திலீபன் அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார். இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தின் மூலம் அழுத்தமான ஒரு பதிவை தமிழ் சினிமாவுக்கு வழங்குவார் என்று நினைக்கிறன் என்றார்.
விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது , இப்படத்தின் டீசரை பார்க்கும் போது சமூகத்துக்கு தேவையான முக்கியமான ஒரு படைப்பை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. இல்லாதவர்கள் ஒரு விஷயத்துக்காக போராடும் போது தான் அது புரட்சியாக மாறுகிறது. இப்படத்தை பார்க்கும் போது நாயகன் ஏதோ ஒரு முக்கிய சமூக பிரச்சனைக்காக போராடுவது போல் தோன்றுகிறது என்றார் இயக்குநர் பா.ரஞ்சித்.
விழாவில் இயக்குநர் நடிகர் பார்த்திபன் பேசியது ஆயிரத்தில் ஒருவன் , அழகி திரைப்படத்துக்கு பின் இப்படம் எனக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது எனலாம். அவ்விரு படங்கள் போன்று இப்படம் எனக்கு கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கி தரும் ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரம் அப்படி. ஹவுஸ் புல் திரைப்படத்துக்கு பின் இப்படத்துக்காக நான் நிறைய விருதுகளை வாங்குவேன் என நம்புகிறேன் என்றார் இயக்குநர் நடிகர் பார்த்திபன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 days ago |
-
நெல்லை: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
30 Apr 2025நெல்லை : நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கார்மேகனார் தெருவை சேர்ந்த ரத்தினபாண்டி மகன்
-
பாக்.கில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
30 Apr 2025லாகூர் : பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
-
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
30 Apr 2025புதுடெல்லி, நாடு முழுவதும் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித
-
புகார் அளிக்க காவல்நிலையம் வருவோரை கண்ணியத்துடன் நடத்தப்பட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
30 Apr 2025புது டெல்லி, ஏதேனும் ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வரும் ஒவ்வொருவரும் மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
தமிழகத்தல் 60,000 பேருக்கு வேலை வழங்கும் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை முதல்வர் வெளியிட்டார்
30 Apr 2025சென்னை, முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஏப். 30) மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை வெளியிட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2025
30 Apr 2025 -
கூட்டாட்சி மிக்க இந்தியாதான் உண்மையான தேசபக்தியாகும்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
30 Apr 2025சென்னை, தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல.
-
பஹல்காம் தாக்குதல்: பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை
30 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
-
தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்: மத்திய அரசு
30 Apr 2025புதுடெல்லி : தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகளை நியமனம் மத்திய அரசு உத்தரவிட்டது.
-
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவில் குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி
30 Apr 2025கைபர் பக்துன்குவா : பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவாவில் குணடு வெடிப்பி்ல் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
-
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்பு
30 Apr 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நேற்று பொறுப்பேற்றார்.
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் தவறுதான்: கர்நாடக முதல்வர் திட்டவட்டம்
30 Apr 2025பெங்களூரு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகத்திற்கு சமம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
நம்ம சென்னை நம்ம சந்தை அங்காடியில் பசுமை காய்கறி, பழங்கள் விற்பனை : தமிழக அரசு அறிவிப்பு
30 Apr 2025சென்னை : நம்ம சென்னை நம்ம சந்தை அங்காடியில் பசுமை காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
அட்சய திருதியை நாளில் தங்கம் விலையில் மாற்றமில்லை
30 Apr 2025சென்னை, அட்சய திருதியை தினமான நேற்று (ஏப்.30) சென்னையில் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.8,980 ஆகவும், பவுன் ரூ.71,840 ஆகவும் விற்பனையானது.
-
உழைப்பாளர் தினத்தையொட்டி மதுக்கடைகள் அடைக்க உத்தரவு
30 Apr 2025சென்னை : உழைப்பாளர் தினத்தையொட்டி இன்று மதுக்கடைகள் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவி, மகனைக் கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை
30 Apr 2025நியூயார்க் : அமெரிக்காவின் நியூகாஸ்டில் பகுதியில் வசித்து வந்த கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி (45), தனது மனைவி சுவேதா (41) மற்றும் 14
-
ஆந்திராவில் கோவில் சுவர் இடிந்து உயிரிழந்த 9 பேர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
30 Apr 2025புதுடெல்லி, கோவில் சுவர் இடிந்து 9 பேர் பலியான விவகாரத்தில் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல் விவகாரம்: இந்தியா, பாக்., அமைச்சர்களுடன் விரைவில் அமெரிக்கா ஆலோசனை
30 Apr 2025வாஷிங்டன் : இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தது.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அமைத்து விஜய் உத்தரவு
30 Apr 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
30 Apr 2025சென்னை, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குரிய ஹால் டிக்கெட்களை என்.டி.ஏ. தற்போது வெளியிட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Apr 2025சென்னை, வருமான வரித்துறை, புலனாய்வுத்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை என எதுவாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம்.
-
சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
30 Apr 2025சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து: 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு
30 Apr 2025கொல்கத்தா : மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
-
ஜே.பி.நட்டா மே 3-ல் தமிழகம் வருகிறார்
30 Apr 2025சென்னை : பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வரும் மே 3ம் தேதி சென்னை வருகிறார். சென்னைக்கு வரும் அவர் மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
-
தனியார் பள்ளியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாளாளர், உதவியாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
30 Apr 2025மதுரை : மதுரையில் தனியார் பள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.