எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச் 11 - ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சினைகளை பொதுமக்களும், மீடியாக்களும் மறக்க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க.- காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டில் அதிருப்தி என்ற கபட நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றியுள்ளார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்பலப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கபடநாடகம் நடந்து முடிந்தாகிவிட்டது. இறுதியாக குட்டு வெளிப்பட்டுவிட்டது. அனைவருக்கும் தெரியும் வண்ணம் உண்மை வெளிவந்துவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணத்தை வெற்றிகரமாக தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்ட தி.மு.க.வும், காங்கிரசும் தங்களுக்குள் உள்ள வேறுபாட்டினை போக்கி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து ஓர் ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. தி.மு.க. காங்கிரசுக்கு இடையே கடந்த சில நாட்களாக நடந்த நாடகங்கள் ஊடகங்களுக்கும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் வியப்பை அளித்து இருக்கலாம். தொகுதி எண்ணிக்கை தொடர்பான காங்கிரஸ் கோரிக்கை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அதிருப்தியை தெரிவித்தார். பின்னர், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தனது கட்சி அமைச்சர்கள் விலகிக் கொள்வதாக மிரட்டினார். ராஜினாமா கடிதங்களை கொடுக்கப் போகிறோம் என்ற பாசாங்கு நாடகத்தினை முன்னிறுத்தி, தி.மு.க. மத்திய அமைச்சர்கள் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். ஆனால், ராஜினாமாக் கடிதங்கள் அவர்களுடைய சட்டைப் பைகளிலிருந்து வெளி வரவில்லை. இதற்குப் பதிலாக மீண்டும் இணைந்து செயல்படுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. ... ஊடகங்களும், மக்களும் ஒரு முழு வாரத்திற்கு ஸ்பெக்ட்ரம் புலன் விசாரணையை மறக்கும் நிலைக்கு இந்த நடவடிக்கை தள்ளுவதாக அமைந்துவிட்டது. இது மட்டுமல்லாமல், விலைவாசி மற்றும் எண்ணிலடங்கா இதர பிரச்சினைகளை மறக்கும் நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். அது தான் கருணாநிதியின் தந்திரம்!
இந்த கபட நாடகம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. மத்திய அமைச்சரவை 2009-ல் அமைக்கப்படும் போதே இது போன்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டதை நாம் பார்த்து இருக்கிறோம். கருணாநிதி டெல்லிக்கு பறந்தார். தன்னுடைய கோரிக்கைகளை வைத்தார். கருணாநிதியின் கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் தலைமை எதிர்ப்பு தெரிவித்தவுடன், கடுங்கோபம் கொள்வது போல் பாசாங்கு நடவடிக்கையில் ஈடுபட்டார். தனக்குள்ள மனக்கசப்பை வெளிப்படுத்தும் விதமாக, பாரதப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு, தனது கட்சியைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்களுடன் சென்னைக்குத் திரும்பினார் கருணாநிதி. கருணாநிதியின் கபடநாடகம் அவருக்கு பலனைத் தந்தது. தனது மகன் அழகிரி, பேரன் தயாநிதி மாறன், மகளின் மனம் கவர்ந்த ஆ. ராசா ஆகியோருக்கு வளமான இலாக்காக்கள் கிடைத்தன! இது போன்ற அச்சுறுத்தல் சம்பவம் அனைத்தும் வெறும் நாடகமே. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கினை கர்நாடகா தர மறுத்த போதும், முல்லைப் பெரியாறில் உச்ச நீnullதிமன்ற ஆணையை செயல்படுத்த கேரளா மறுத்த போதும், அனைத்துப் பொருட்களின் விலைகள் உயர்வதற்கு வழிவகுக்கின்ற பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மத்திய அரசு திரும்பத் திரும்ப உயர்த்திய போதும், தமிழக மீனவர்கள் நடுக் கடலில் படுகொலை செய்யப்பட்ட போதும், வறுமையில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட போதும், மத்திய அரசிலிருந்து விலகப் போகிறோம் என்று மத்திய அரசை கருணாநிதி மிரட்டவில்லை. வழக்கம் போல, பாரதப் பிரதமருக்கு கடிதங்களை அனுப்பினார்.
தனது மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்களுக்கு வளம் கொழிக்கும் இலாக்காக்களை பெற வேண்டும் என்று விரும்பினாலோ, தேசத்தின் சொத்தை சுரண்டிய தனக்கு பிரியமானவர்களும், நெருக்கமானவர்களும் மத்திய புலனாய்வுத் துறையினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட போகிறார்கள் என்றாலோ, வேறு ஏதாவது காரணத்தைச் சொல்லி வீராப்புடன் மத்திய அரசை மிரட்டுவார். காங்கிரஸ் தலைமையும் அப்பாவி காங்கிரஸ் தொண்டர்களை ஏமாற்றும் வகையில் தி.மு.க.வின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பது போன்று நாடகமாடும். பின்னர் இரண்டு மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்காகத் தான் ஒரு வார கால போராட்டம் நடைபெற்றது என்ற தோற்றத்தை உருவாக்கி சரணடைந்து விடும்! காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகிப்பது காங்கிரசுக்கு மிகப் பெரிய சங்கடம் ஆகும். உலகத்தின் மிகப் பெரிய ஊழலான ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழலை தலைமையேற்று நடத்தியவர் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா. இந்த ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் சென்றடைந்த இடத்தை ஆராய்ந்தால், தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் வீட்டுக் கதவுகளை சென்று அடைகிறது.
தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு, கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது மாபெரும் முழக்கத்துடன் துவக்கப்பட்ட 2400 கோடி ரூபாய் மதிப்பிலான சேதுசமுத்திரத் திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. இந்தப் பணம் எல்லாம் தி.மு.க. தலைமைக்கு சென்று, மதுபானத் தொழிற்சாலைகள், வரியில்லாத கடைகள், விடுதிகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் இன்று முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றது. தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது தனது செல்வாக்கினை பயன்படுத்தி, தன்னுடைய மூத்த சகோதரனின் வணிக சாம்ராஜ்யத்தில் அபரிமிதமான முதலீடுகள் சென்றடைவதை உறுதி செய்யக் காரணமாக இருந்தார். இந்த நிறுவனம், தொலைக்காட்சியை தாண்டி திரைப்படத் துறை, விமானத் துறை போன்றவற்றிலும் தற்போது விரிவடைந்து இருக்கிறது. உச்ச நீnullதிமன்றத்தில் இருந்து கண்டனங்கள் வரக் காரணமாக இருந்த சர்ச்சைக்குரிய மத்திய கண்காணிப்புத் துறை ஆணையர் பி.ஜெ. தாமஸ் நியமனமும் தி.மு.க. தலைமையின் வேண்டுகோளின்படி நடைபெற்று இருக்கிறது.
இந்த அளவுக்கு காங்கிரசுக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய இவர்களுக்கு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டியவர்கள் இந்த மாநிலத்தில் உள்ள பாவப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களே. இந்த கபடநாடகங்களை எல்லாம் தமிழக மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், நகரத்திலிருந்தும் எனக்கு வருகின்ற தகவல்கள் இதைத் தான் குறிப்பிடுகின்றன. தொழில்நுட்ப வல்லமையுடைய இளைய தலைமுறையினர் எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னணு அஞ்சல் மூலமாக பரிமாறிக் கொள்ளும் செய்திகளும் இதைத் தான் பிரதிபலிக்கின்றன. ஆனால், வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் தன்னுடைய விலைமதிப்பற்ற வாக்கினைச் செலுத்த முன்வர வேண்டும். இல்லையெனில், திருமங்கலம் யுக்தி, சிவகங்கை யுக்தி, என பாடப் புத்தகங்களில் இடம்பெறாத சட்டவிரோத யுக்திகள் எல்லாம் மீண்டும் செயல்படுத்தப்படும். தமிழக அரசியலில் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டிய இந்தத் தருணத்தில், தமிழ்நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கை பாதுகாப்பாகவும், செழுமையாகவும், பிரகாசமாகவும் விளங்குவதை உறுதி செய்ய அனைவரும் விழிப்புடனும், எழுச்சியுடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும். தனது ஜனநாயக கடமையை ஆற்றி தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு
20 Jul 2025புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
-
முதற்கட்ட பயணம் வெற்றி: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். நன்றி
20 Jul 2025சென்னை : "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று அ.தி.மு.க.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ