முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவிலுக்கு ஆண் வேடமிட்டு வந்த பெண்கள்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம், டிச.1 - சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்வேடமிட்டு வந்து வரிசையில் நின்ற பெண்கள் பிடிபட்டனர். இவர்கள் சென்னை மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். அவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். சபரிமலை அய்யப்பனை தரிசிக்க கேரளா மட்டுமின்றி தமிழகம், கர்நாடகம், ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இவர்களில் ஆண்பக்தர்கள் மட்டுமே இருமுடி கட்டி 18 -ம் படி ஏறி அய்யப்பனை தரிசிக்க முடியும். பெண்களில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் யாரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது. இது காலம்காலமாக இங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீகம். ஆனால் சில இளம்பெண்கள் அய்யப்பனை தரிசிக்கும் ஆவலில் ஆண்  வேடமிட்டு கோவிலுக்கு வரும் சம்பவங்கள் அவ்வப்போது  நடக்கின்றன. இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலில் பெண் போலீசார் நியமிக்கப்பட்டு பெண் பக்தர்களை கண்டுபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள தங்கள் வயதை உறுதி செய்வதற்கான சான்றிதழையும் கொண்டு வர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. இருந்தும் மண்டல பூஜை தொடங்கிய 2-வது நாளிலேயே ஆந்திராவைச் சேர்ந்த 2 இளம் பெண்கள் ஆண்வேடமிட்டு இருமுடி கட்டி அய்யப்பனை தரிசிக்க வரிசையில் நின்றனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீசார் கண்டு பிடித்து வெளியேற்றினர். இதையடுத்து கோவிலில் கூடுதல் பெண் போலீசார் நியமிக்கப்பட்டு ஆண் வேடமிட்டு வரும் பெண் பக்தர்களை கண்டு பிடிக்க உத்தரவிடப்பட்டது. 

சபரிமலை சன்னிதானத்தில் நேற்று வரிசையில் நின்ற ஒரு பக்தர் மீது பெண் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் தனக்கு 52 வயது ஆகிவிட்டதாகவும் எனவே தான் கோவிலுக்கு வந்ததாகவும் கூறி வயது சான்றிதழை கொடுத்தார். அதை பரிசோதித்து பார்த்த அதிகாரிகள் அந்த சான்றிதழ் போலியானது என்பதை கண்டுபிடித்தனர். பிடிப்பட்ட பெண் சென்னையை அடுத்த செங்கல்பட்டைச் சேர்ந்தவர் அவரது பெயர் வள்ளி(35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து திருப்பி அனுப்பினர். 

இதுபோல சன்னிதானத்தில் ஆண்வேடமிட்டு நின்ற 2 பெண்களும் பிடிபட்டனர்.  இவர்கள் ஆந்திராவைச்சேர்ந்தவர்கள் அவர்களையும் போலீசார் பிடித்து திருப்பி அனுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago