முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் தூண்டுதலுக்கு பலிகடா ஆகி விட்டார் நடிகர் கமல்ஹாசன்: ஜெயகுமார் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, பன்னாட்டு மருந்துகளின் கம்பெனிகளின் தூண்டுதலுக்கு பலியாகி விட்டார் என்று நடிகர் கமல்ஹாசன் மீது அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்,

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆங்கில மருத்துவம் தோன்றி நூற்றி அம்பது ஆண்டுகள் தான் ஆகிறது. தமிழ்மருத்துவம் என்பது கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது, தமிழ்மருத்துவம், இன்றைக்கும் பூண்டு.சீரகம், வெங்காயம் மிளகு போன்றவற்றை உணவில் எடுத்துக்கொண்டால் எந்த நோயும் நம்மை அண்டாது. ஏடிஎஸ் கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு நிலவேம்பு கசாயம் அருந்தலாம், அதை 15 ஆண்டுகளுக்கு முன்னரே தேவசகாயம் என்ற மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். நிலவேம்பு கஷாயத்தை பற்றி மக்களை குழப்புகிற செயலில் யாரும் இறங்க வேண்டாம். திமுக ஆட்சியில் சிக்கன் குனியா நோய் பாதிப்பு ஏற்பட்டபோது, நிலவேம்பு கஷாயம் தான் வழங்கப்பட்டது. அப்போது கமல் சென்னையில் தானே இருந்தார். அப்போது ஏன் எதுவும் பேசவில்லை. அதிமுக ஆட்சியில் எது செய்தாலும் குற்றமாக கருதி கொண்டு பேசுகிறார். பன்னாட்டு மருந்துகளின் வியாபாரம் படுத்து விட்டதால் அந்த நிறுவனங்கள் தங்களது வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள முயன்று வருகின்றன. அதற்கான செய்திகளை பரப்ப திட்டமிட்டு வருகின்றன. அதற்கு கமலஹாசன் அடிமையாகி விட்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது

டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை அரசு தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு  வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தவர்கள் குறித்த புள்ளிவிபரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த விவரங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. டெங்கு ஓழிப்பை அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து மக்கள் இயக்கமாக மாற்றி போர்க்கால நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் உற்பத்தி செய்யும் கொசுக்களை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். டெங்கு காய்ச்சல் விரைவில்  கட்டுப்படுத்தப்படும்.

டெங்கு விவகாரத்தில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திமுக மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. அரசு நடவடிக்கைகள் குறித்து பொய்ப்பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதில் திமுக ஆக்கப்பூர்வமான பணியை செய்யவில்லை.

அரசு கட்டிடங்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக கருதினால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது. அதில் எந்த தயக்கமும் காட்டாது. அம்மாவின் அரசு முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளும், அதில் எந்த மாறுபாடும் இல்லை. அரசு கட்டிடங்கள் தரம் குறைந்திருப்பதாக கருதப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படிப்பட்ட கட்டிடங்களை தமிழக அரசு இடிப்பதற்கும் தயங்காது.

டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் நிதி கேட்டிருப்பது, கமிஷன் அடிப்பதற்கு தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார், கமிஷன் கொள்ளை என்பதெல்லாம் திமுக ஆட்சியில் தான் நடந்தது. 1 லட்சத்து 80 ஆயிரம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த தீர்ப்பு வரும் 25-ம் தேதி வரவிருக்கிறது. இந்தியாவே தமிழ்நாட்டை எள்ளிநகையாடும் வகையில் நடந்தது ஸ்பெக்ட்ரம் ஊழல் தமிழ்நாட்டையே தலைக்குனிய வைத்தவர்கள் கமிஷன் கொள்ளை என்றெல்லாம் பேசலாமா? ஸ்பெக்ட்ரம் ஊழலில் இமாலய சாதனை படைத்தவர்கள், விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிந்தவர்கள், சர்க்கரை, பூச்சி மருந்தில் ஊழல் புரிந்தவர்கள் திமுகவினர், உலகிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட முதல் ஆட்சி திமுக ஆட்சி தான்,. எனவே ஸ்டாலினுக்கு அதை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

உள்ளாட்சித்தேர்தல் நடத்தவிடாமல் இடைக்கால தடையாணை பெற்றவர்கள் திமுகவினர் தான், நாங்கள் உள்ளாட்சித்தேர்தல் நடத்த தயாராக இருந்த போது அதற்கு முட்டுக்கட்டை போட்டது திமுக. நீதிமன்றத்தில் இடைக்கால தடையாணைக்கு அடிப்படை காரணகர்த்தாவே திமுக தான். கருணாநிதியே மீண்டும் எழுந்து வந்தாலும் அதிமுக ஆட்சியையும் கட்சியையும் அசைத்து பார்க்கக்கூட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து