எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தினேஷ் - அதிதி மேனன் நடிக்கும் “களவாணி மாப்பிள்ளை“
தினேஷ் - அதிதி மேனன் நடிக்கும் “களவாணி மாப்பிள்ளை“
நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப்பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது. மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் துவக்க விழா நடைபெற்றது. படப்பிடிப்பு 15 ம் தேதி பொள்ளாச்சியில் துவங்க உள்ளது. ஜனரஞ்சகமான காமெடி, காதல் கதையாக உருவாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |