எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.1 - புத்தாண்டு பிறந்ததை ஒட்டி கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்து விபரம் வருமாறு. தி.மு.க. தலைவர் கருணாநிதி:தமிழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்திட வேண்டும், அண்டை மாநில நட்புறவுகள் சிறந்து, தமிழக மக்களின் வேதனைகள் ங்கிட வேண்டும் என்ற நோக்கில் எங்கும் புதிய சிந்தனை மலர்கள் த்துக் குலுங்கட்டும் தொடங்கும் 2012 ஆங்கிலப் புத்தாண்டில் எனக்கூறி, தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:
நாட்டில் எவர் ஒருவரும் உணவுக்கு ஏங்குகிற நிலை போக்க இப்புத்தாண்டில் ஒரு புதிய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும். பொதுப் பிரச்சினையில் நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிற நிலை உருவாக வேண்டும்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்: 2011ம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. பொருட்களின் விலை உயர்வு என்று மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு உயர்த்தின. தமிழ் நாட்டு மக்கள் இந்த ஆண்டின் இறுதியில் மிகத் தீவிர புயலும் தமிழ் நாட்டையும், புதுச்சேரியையும் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2012ஆம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய வாழ்வு தென்றலாக வரவேண்டும். கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து எதிர்காலம் மக்களுக்கு அமைதியையும், முன் னேற்றத்தையும் தரவேண்டும் என்றும், போனது புயலாக இருக்கட்டும், வருவது தென்றலாக இருக்கட்டும்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:
புத்துணர்வு அளிக்கும் ஆண்டாக 2012 ஆம் ஆண்டு அமையட்டும். இதற்காக நாம் மேற்கொண்ட புதிய தீர்மானங்களை நிறைவேற்றி முடிக்க சபதம் ஏற்போம். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும். அந்தக் கனவு நனவாக்க வாழ்க்கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு விடக்கூடாது. அந்த வகையில் நம் கனவை நிறைவேற்ற புதிதாக போராடுவோம் என்று சபதமேற்கொண்டு செயல்பட கற்றுக் கொள்வோம்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:
கணக்கற்ற சோதனைகள் தமிழகத்தையும், தமிழ்க் குலத்தையும் சூழ்ந்திருக்கும் காலகட்டத்தில் புதிய ஆண்டு மலர்கிறது. கொடுந்துயரில் தவிக்கும் ஈழத் தமிழினம், தென்தமிழ்நாட்டின் வாழ் வாதாரமான முல்லைப் பெரியாறு அணைக்கு கேடு செய்ய முனையும் கேரளம், சிங்களக் கடற்படையால் நாளும் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் எனப் பல்வேறு துன்ப இடர்களைத் தமிழகம் சந்திக்க நேர்ந்துள்ள நிலையில் முல்லைப் பெரியாறு உரிமை காக்க கட்சி, சாதி, மத எல்லைகள் கடந்து தமிழகம் கொந்தளித்து எழுந்துள்ள நிலைமை எதிர் காலத்தைப் பற்றிய நம் பிக்கை ஊட்டுகிறது. சமுதாயத்தின் அனைத்துப் பகுதிகளையும் செல்லரிக்கச் செய்வதற்கு ஊழலும் மது அரக்கனும் காரணங்களாகும். இத்தீமைகளிலிருந்து தமிழகம் விடுபட்டு உன்னத நிலை பெறவும் துயர இருளில் தவிக்கும் ஈழததமிழ் மக்கள் விடியலைக் கண்டு தமிழீழம் மலரவும் ஊழலற்ற அரசியல் தமிழகத்தில் வெற்றி காணவும் 2012ஆம் ஆண்டு பாதை அமைக்கட்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:
2011ம் ஆண்டில் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத் தளங்களில் பல நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வருடத்தின் கடைசி நாட்களில் 'தானே' புயலின் தாக்குதலையும் சமாளித்து 2012ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். கடந்த காலப்படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு 2012ம் ஆண்டினைத் திட்டமிட்டு தமிழினத்தின் தலைநிமிர்வுக்கான ஆண்டாக அமைத்துக் கொள் ளும் வகையில் இப்புத் தாண் டினை வரவேற்போம். ஈழத் தமிழர்களின் துயர்களைத் துடைப்பதற்கும், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலைத் தீர்ப்பதற்கும், சாதிக்கொடுமை உள்ளிட்ட பிற வன்கொடுமைகளிலிருந்து தலித் மற்றும் அனைத்து விளிம்புநிலை மக்களைப் பாதுகாப்பதற்கும் ஏற்றதொரு ஆண்டாக 2012ம் ஆண்டு அமைந்திட தமிழர்கள் யாவரும் ஒருங்கிணைந்து நிற்போம் எனவும் இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் தானே புயல் தாக்குதல் என்னும் துயர நிகழ்வோடு முடிந்திருக்கிறது. கடந்த ஆண்டு பல்வேறு வகையிலும் சோதனைகள் நிறைந்த ஆண்டாக அமைந்தாலும் வரும் புத்தாண்டு அனைத்து சோதனைகளையும் வென்று சாதனை படைக்கும் ஆண்டாக அமையவேண்டும் என்ற என் நல்லெண்ணத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஒருமைபாட்டிற்கும், இறையாண்மைக்கும் எந்த வகையிலும் அச்சுருத்தல் இல்லாத வகையில் மாநிலங்களுக்கு இடையே நல்லுறவு, மக்களிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் மேலோங்க வேண்டும்.
வரும் புத்தாண்டு அனைவருக்கும் நல்ல வளமும் மகிழ்ச்சியும் அளிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்கிற என் பிரார்த்தனையோடு அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தொரிவித்துக்கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்:
தமிழர்களுக்கு, துன்பச் சூழ்நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. மக்கள் சக்தியினால் துன்பங்கள் துடைக்கப்பட வேண்டும். இந்த வலிமை மிக்க மக்கள் சக்தி புத்தாண்டில் வெற்றி பெற வேண்டும்.
புதிய திக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்: ஏழை, எளிய மக்கள் நிம்மதியாக வாழ மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரும் புத்தாண்டில் கூடங்குளம், முல்லைப் பெரியாறு என்று தமிழகத்தை அச்சுறுத்தும் பிரச்சினைகள் சுமூகமாக தீர வேண்டும். நம்நாட்டு மக்கள் அனைவரும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்னும் உணர்வோடு எதிர் வாரும் காலங்களில் ஒன்று பட்டு அத்தனை சவால்களையும் சந்தித்து வெற்றி காண்போம்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:
வருகின்ற புத்தாண்டு (2012) அனைவருக்கும் அனைத்தும் தரும், அன்பு பொழியும் ஆண்டாகவும், மனிதனின் பகுத்தறிவு ஆக்கத்திற்கே தவிர, அழிவுக்கல்ல என்பதை வரலாற்றில் பதிய வைக்கும் சாதனை பொங்கும் ஆண்டாக மனிதநேயம் மலர அடையட்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Jan 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கனு உற்சவ பவனி.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் காலை கருட வாகனம், இரவு அனுமந்த வாகனம்.
- மதுரை செல்லத்தம்மன் விருசப சேவை.
-
இன்றைய நாள் எப்படி?
16 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
16 Jan 2026


