அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அக்ரோ நிறுவனம் ஒன்று பறக்கும் ஆம்புலன்சை உருவாக்கியுள்ளது. நோயாளியையும், உடன் ஒரு மருத்துவ உதவியாளரையும் சுமந்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உள்ளே லைவ் கேமரா வசதியும், ஆடியோ கனெக்ஷனும் இருப்பதால், மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்குள் நோயாளியின் நிலைமையை ஆராய்ந்து, தகுந்த மருத்துவ ஆலோசனைகளை உதவியாளருக்கு கொடுக்க முடியும். இந்த ட்ரோன், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அவசர காலத்தில் சிட்டாய் பறக்கும் இந்த ட்ரோனுக்கு ஓட்டுனர் இல்லை மற்றொரு ஆச்சரியம். ஜி.பி.எஸ் வைத்து லொகேஷனை அடையாளம் கண்டு, தானாக பறந்து செல்கிறது. இதன் விலை சுமார் ஆறு கோடியாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ரஷ்ய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கு பேர், பூனை வளர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பூனைகள் வைத்திருப்பவர்கள் தனியாகப் பதிவு செய்திருக்க வேண்டும், பூனைகளுக்கு என்று தனி பாஸ்போர்ட் இருக்கிறது. எஜமானர்களுடன் வெளியே செல்லும்போது உரிய ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன. பூனை வளர்ப்பை அதிகரிக்க ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் சர்வதேசப் பூனைக் கண்காட்சி நடைப்பெற்றது. இதில் ரஷ்ய பூனை ஒன்று ரூ.15 லட்சத்து 31 ஆயிரத்துக்கு விற்பனையானது. நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சியில், ரஷ்யா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து உயர் ரக பூனைகள் இடம்பெற்றன.
உலகுக்கே காதலை போதித்த காமசூத்ரா எழுதப்பட்ட நாடு இந்தியா. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்து கோயில்களில் அற்புதமாக காதலை வெளிப்படுத்தும் சிற்பங்களை ஏராளம் காணலாம். அவற்றில் காமக்கலையினை காட்சி வடிவமாக பிரதிபலிக்கும் கட்டிடக்கலை அதிசயம் கஜுராஹோ. இதன் காரணமாக இங்கு வெளிநாட்டவர் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கோவா ஒரு சுற்றுலாத் தலமாக அற்புதமான விடுமுறை கால கொண்டாட்டமாகவும், அடைவதற்கு சுலபமான இடமாகவும் இருக்கிறது.
நம்மூர் திருமணங்களில் பட்டு சேலையும், பட்டு சரிகை வேட்டியும் உடுத்துவதை மரபாக கொண்டுள்ளோம். ஆனால் மேற்கத்திய திருமணங்களின் போது வெள்ளை நிற உடையில் மணமக்கள் தேவதை போல் காட்சியளிப்பர். இந்த மரபு முதன் முதலில் பிரான்ஸில் தான் தோன்றியது. 1499 இல் 12 ஆம் லூயிக்கும், அன்னாவுக்கும் நடைபெற்ற திருமணத்தின் போதுதான் முதன் முதலில் வெள்ளை ஆடை அணியும் பழக்கம் ஏற்பட்டது. இருந்த போதிலும், 1840 இல் விக்டோரியா மகாராணிக்கும் இளவரசர் ஆல்பர்ட்டுக்கும் நடைபெற்ற திருமணத்துக்கு பிறகுதான் வெள்ளை ஆடை மரபு தொடர்ந்து பொது மக்களிடமும் நீடித்து நிலைத்தது.
தமிழர்களின் பழம்பெரும் இசைக்கருவிகளுல் ஒன்று நாதஸ்வரம். அனைத்து மங்கல நிகழ்ச்சிகளிலும் தவறாம் இடம் பெறக் கூடியதாகும். இது பொதுவாக ஆச்சா என்ற மரத்தில்தான் செய்யப்படுகிறது. ஆனால் கல்லால் செய்யப்பட்ட நாதஸ்வரம் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் நாதஸ்வரம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலுள்ளது.மற்றொரு கல் நாதஸ்வரம்: தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயிலிலும் ஒரு கல் நாதஸ்வரம் உண்டு. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் அரசாண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட இந்த கல் நாதஸ்வரம். இப்போது வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே பாதுகாக்கபட்டு வருகிறது.
தமிழகத்தில் தஞ்சை, ஒடிசாவில் கோனார்க் பகுதியில் சூரிய கோவில் உள்ளது. இதுதவிர, கேரளா, ஜம்மு காஷ்மீர், குவாலியர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரிலும் இந்த கோவில்கள் அமைந்துள்ளது. சூரிய தேவன் இடம் பெயர்வதை குறிக்கும் விழாவாக மகர சங்கராந்தி வட மாநிலங்களில் பொங்கல் நேரத்தில் கொண்டாடப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


