Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பரத்வாஜாசனம்

உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முகுது வலியை கட்டுப்படுத்தும் எளிய ஆசனம்தான் பரத்வாஜாசனம்.  இந்த ஆசனம் செய்வதால், முதுகெலும்பை சீராக வளையும் படி செய்கிறது. முதுகெலும்புக்கு வலிமையூட்டப்படுகிறது. முதுகு வலியை கட்டுப்படுத்தி, முதுகெலும்பின் ஆர்த்தரைடீஸை கட்டுப்படுத்துகிறது இந்த ஆசனம்.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

கொசுக்கு எதிரி கொசு

கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரசுக்கு எதிரான போரட்டத்தில் கொசுக்களையே களமிறக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகை அச்சுறுத்திவரும் ஜிகா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் குழு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.இந்தநிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் மூலம் ஜிகா, மலேரியா உள்ளிட்ட கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க முடியும் என்று அமெரிக்க மறுத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். கொசுக்களின் மரபணுக்களை மாற்றி அவற்றை வெளிவிடுவதன் மூலம், ஜிகா மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவப்பு செவ்வாய்

சூரியனில் இருந்து 4-வதாக இருக்கும் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் புயலால் மேற்பரப்பில் இருக்கும் சிவப்பு மாசை வளிமண்டலத்தில் நிரப்பிவிடும்.அங்கு, ஈர்ப்பு விசை குறைவு காரணமாக, இந்த மாசுத் துகள்கள் நீண்ட நாட்களுக்கு அப்படியே பரவியிருக்கும். இதனாலேயே செவ்வாய் கோள் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

வயதான மூதாட்டி

உலகின் வயதான நபராக கருதப்பட்ட இத்தாலியின் எம்மா மார்ட்டின் லூகியாவின் மறைவுக்குப் பிறகு தற்போது ஜமைக்காவின் வைலட் பிரவுன் அந்த பெருமையை பெற்றுள்ளார். 117 வயதான இவர். ‌உணவில் பன்றி, கோழி வகை உணவை அறவே தவிர்கிறாராம். 1900-ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி பிறந்த இவர் கடந்த மாதம் தனது 117வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

‘ஃபேஸ் ஆப்’

தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வரும் விஷயம் ‘ஃபேஸ் ஆப்’. இந்த ’ஃபேஸ் ஆப்’ என்னும் அப்ளிகேஷனின் மூலம் ஆண் முகத்தைப் பெண் முகமாகவும் பெண் முகத்தை ஆண் முகமாகவும் மாற்றலாம். நீங்கள் வயதானால் எப்படி இருப்பீர்கள் என்றும் மாற்றிப்பார்க்கலாம். இளைஞராக இருக்கும் உங்கள் முகத்தைக் குழந்தை முகமாகவும் மாற்றிப் பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago