எவர்லாஸ்ட் நோட்புக் மூலம் எழுதுவதை டிஜிட்டலாக சேமிக்க வசதி வந்தாச்சு. இந்த நோட்புக்கில், எழுதலாம், பதிவு செய்து வைக்கலாம். கூடுதலாக, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றிலும் பகிரலாம். க்ளவுட் முறையில் கூகுள் ட்ரைவ் உள்ளிட்டவற்றில் கோப்புகளை சேமிக்கவும் வசதியுண்டு.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
வெப்பம், நிலஅதிர்வு காரணமாக ரயில் தன்டவாளங்கள் சுருங்கி, விரிவதால், தண்டவாளங்கள் விலக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கவே ஜல்லிக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீரின் தேக்கத்தால் தண்டவாளங்கள் மூழ்காமல் இருக்கவே ஜல்லிக் கற்கள் மீது தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.
மனித உடலில் தோலின் செயல்பாடு குறித்து நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் பல சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளது. அதில் குறிப்காக, மனிதர்களின் உடலில் ரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவை சீராக செயல்பட தோல் உதவுவதுதான் என்பது. முதலில் இந்த சோதனையை ஒரு சுண்டெலியின் மீது நடத்தப்பட்டது. மிக குறைந்த அளவிலான ஆக்சிஜன் உள்ள இடத்திலும், அதிக அளவிலும், மிதமான அளவிலும் ஆக்சிஜன் உள்ள இடங்களிலும் வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் மூலம், ரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவை சீராக செயல்பட தோல் உதவுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மூலம் மனிதர்களின் உடலில் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை சீராக வைப்பதில் தோலின் பங்கு மிக முக்கியம் என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு பரவலாக பேசப்பட்ட ஒரு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆவர். நம் நாட்டின் தேசிய கீதமான “ஜன கண மன” பாடலை எழுதிய ஒரு அற்புத கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இவர் கவிதை இயற்றுவதில் மட்டுமல்ல இசைப் பாடகர், கதாசிரியர், நாவலாசிரியர், ஓவியர், கல்வியாளர் போன்ற பல துறைகளிலும் கால்தடம் பதித்த அற்புத மாமனிதர் ஆவார். கவிதைக்காக நோபல் பரிசு வாங்கிய ரவீந்திரநாத் தாகூருக்கு சிறு வலைபோட்டு லாவகமாக மீன் பிடிக்கும் ஆற்றல் உண்டு. வடிகட்டி மாதிரி உள்ள சின்னஞ் சிறிய வலையில் பரபரப்பான கொல்கத்தா நகரத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைதியாக ஓடும் ‘விளிண்டா’ ஆற்றங்கரையில் அவர் அடிக்கடி மீன் பிடிக்கச்செல்வது வழக்கம். பிடித்த மீனை சிறிதுநேரம் உள்ளங்கையில் வைத்திருந்துவிட்டு பிறகு ஆற்றில் விடுவாராம்.
நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண்ணை தெரியுமா. அவர் பெயர் வங்காரி மாத்தாய். கென்யா நாட்டின் இகதி எனும் சிறிய ஊரில் 1940-ம் ஆண்டு ஏப்ரல் 1 இல் பிறந்தவர் வங்காரி மாத்தாய். பெண்கள் கல்வி கற்க முடியாத சூழலில் இவர் படித்து அமெரிக்காவில் பட்டம் பெற்றார். மேலும் கென்யாவின் முதல் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர். நைரோபி பல்கலையில் பேராசிரியரானார். முதல் பெண் பேராசிரியர் என்ற பட்டத்தையும் பெற்றார். மார்ட்டின் லூதர் கிங் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் தனது நாட்டில் இயற்கை வளத்தை காப்பதற்காக பசுமை பட்டை இயக்கத்தை உருவாக்கினார். அதன் மூலம் 30 ஆண்டுகளில் 3 கோடி மரங்களை நட முயற்சி மேற்கொண்டார். இயற்கை, சுற்றுச்சூழல் மட்டுமின்றி, பெண்கள் கல்வி, ஒடுக்குமுறை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினார். இவரது இயக்கம் ஆப்பிரிக்கா முழுவதும் பரவியது. இவரது போராட்டத்தை ஒடுக்க முயற்சித்த அரசின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இவருக்கு கிடைத்த செல்வாக்கால் தேர்தலில் போட்டியிட்டு அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பதவி வகித்தார். இயற்கை வளத்தை மேம்படுத்த எண்ணற்ற முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு 2004-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


