முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கல்லீரல் பாதிப்பு

மாரடைப்பு, புற்றுநோய் போல கல்லீரல் பாதிப்பும் ஆயுட்காலத்தை குறைத்துவிடுமாம். உடலில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் பிரித்தெடுத்து சிறுநீரகத்திற்கு அனுப்பும் முக்கிய பணியை கல்லீரல் மேற்கொள்கிறது. சிறுநீரகத்தை போல கல்லீரலும் 2 பாகங்களாக பிரிக்கப்பட்டு அதன் நடுவில் பித்தநீர் பை அமைந்திருக்கும். கல்லீரல் பாதிப்புக்குள்ளானால் செரிமான கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும். கல்லீரல் பாதிப்பை தடுக்க கீரை, பூண்டை உணவில் எடுத்து கொள்ள வேண்டும். தேன் கல்லீரலில் உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க துணைபுரியும். தேங்காய் எண்ணெய் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும். கிரீன் டீ பருகி வருவதும் கல்லீரலின் சீரான இயக்கத்திற்கு துணை புரியும். தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் சாப்பிட்டு வரலாம். அதிலிருக்கும் தாதுக்கள் கல்லீரலுக்கு நலம் சேர்க்கும்.

பிரபலமான தலங்கள்

உலகுக்கே காதலை போதித்த காமசூத்ரா எழுதப்பட்ட நாடு இந்தியா. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்து கோயில்களில் அற்புதமாக காதலை வெளிப்படுத்தும் சிற்பங்களை ஏராளம் காணலாம். அவற்றில் காமக்கலையினை காட்சி வடிவமாக பிரதிபலிக்கும் கட்டிடக்கலை அதிசயம் கஜுராஹோ. இதன் காரணமாக இங்கு வெளிநாட்டவர் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கோவா ஒரு சுற்றுலாத் தலமாக அற்புதமான விடுமுறை கால கொண்டாட்டமாகவும், அடைவதற்கு சுலபமான இடமாகவும் இருக்கிறது.

எச்சரிக்கை

சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வந்தால். சிறுநீரில் புரதம் கலந்து வெளியாகிறதன் அறிகுறியாகும். காய்ச்சல், நீர்வறட்சி, உடல்நல குறைபாடு போன்றவை உண்டாகும் போது சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறி வரும். மஞ்சள் காமாலை அதிகரித்து இருப்பதை சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளிப்பட்டு காட்டிக் கொடுக்கும்.

சாப்பிடும் போது...

சுவாசக்குழாய் திறந்தால்தான் ஒருவரால் பேசமுடியும். நாம் பேசிக்கொண்டே சாப்பிடும்போது சுவாசக்குழாய் திறப்பதால், இதற்குள் உணவுப்பொருள் நுழையும் ஆபத்து அதிகம். அதை வெளியேற்ற நடக்கும் செயல்தான் புரையேறுதல். எனவே சாப்பிடும் போது பேசுவதை தவிர்ப்பதே நல்லது.

புதிய தொழில்நுட்பம்

மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ள, இஸ்ரேலைச் சேர்ந்த ’எலெக்ட்ரோட்’ (Electroad) எனும் நிறுவனம் புதிய தீர்வை முன்வைத்துள்ளது.எலெக்ட்ரிக் கார்கள் பயணிக்கும் போது ஒயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் உதவியுடன் சாலைகள் மூலம் சார்ஜ் செய்யும் முறை குறித்து அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது

சீனாவின் பெரிய புதையல்

சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நதியிலிருந்து, சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய 10,000 க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர். மேலும், பெரும் அளவில் வெண்கலத்தால் ஆன நாணயங்கள், வாள்கள், கத்திகள், ஈட்டிகள் மற்றும் இரும்பு ஆயுதங்களும் கிடைத்துள்ளன. 1646-ம் ஆண்டில், ஜியான்ஜோங் என்ற விவசாயிகள் தலைவர் மிங் வம்சவளியனரால் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது அவரது செல்வங்களை படைவீரர்கள் சிச்சுவான் உள்ள நதி வழியாக 1000 படகுகளில் எடுத்து சென்றபோது படகு மூழ்கியதாக நம்பப்படுகிறது. வறண்ட காலத்தில் நதியில் இருந்த தண்ணீரை வெளியேற்றி ஆராய்ச்சியாளர்கள் தோண்டியதில்  இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்