முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பாட்டி வைத்தியம்

முடி உதிர்வு என்பது யாருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை. கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த கண்ட ஷாம்புக்களை உபயோகிக்காமல் இயற்கை முறையில் தீர்வு காண ஆராய வேண்டும். மாங்கொட்டையில் உள்ள ஓட்டை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் பகுதியை அப்படியே அரைத்துக்கொள்ளுங்கள். வெண்ணெய் போல் வரும். இதனுடன் 1 ஸ்பூன் வேப்பம்பூ, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, கடலைமாவு, பயத்தமாவு, சீயக்காய் மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து அலசுங்கள். இது, முடி உதிர்வதைத் தடுத்து வளர்ச்சியைக் கூட்டும்.

இப்படியும் சிலர்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரூ.6000 கோடி மதிப்புடைய ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்யாம் தோலாக்கியாவின் மகன் ஒருவர் ஒரு மாதம் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். செகந்திராபாத்தில் 100 ரூபாய் வாடகை அறையில் தங்கிய அவர் காலணி கடைகளில் பணியாற்றியும், ரிக்ஷா தொழிலாளிகளுடன் தங்கியும் இந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

பறவைகளைப்போல வலசை செல்லும் விலங்குகள் எது தெரியுமா?

பருவ காலத்தின் போது இனப்பெருக்கத்துக்காகவோ, இரை தேடியோ பறவைகள் கண்டம் விட்டு கண்டம் செல்வதை வலசைக்கு போதல் என்று குறிப்பிடுகின்றனர். அதென்ன பறவைகள் மட்டும்தான் வலசை செல்லுமா, விலங்குகள், பூச்சிகள் செல்வதில்லையா என்று கேட்டால்... ஆம்.. அவற்றிலும் சில இது போல வலசை செல்கின்றன. சில பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆகியவை இரை மற்றும் இனப் பெருக்கத்துக்காக வாழக்கூடிய சூழலை நோக்கி இடம்பெயர்கின்றன. அலாஸ்கா கரிபு மான்கள், மெக்சிகோ மோனார்க் வண்ணத்துப்பூச்சிகள், ஆப்பிரிக்கத் தட்டான்பூச்சிகள், ஆப்பிரிக்க எருதுகள், சாம்பல் வண்ணத் திமிங்கிலங்கள் போன்றவை மிக நீண்ட தூரத்துக்கு வலசை செல்கின்றன.

பொறாமை உணர்வு

பண்டிகைக் கொண்டாட்டம், விடுமுறைக் காலங்களில் எடுத்த புகைப்படங்களைப் நாம் ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்யும் போது, அதைப் பார்க்கும் முக நூல் நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொறாமை உணர்வு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மருத்துவத்தில் புதிது

உடலில் ஏற்படும் பிரச்னையை முன்கூட்டிய கண்டறியும் ரோபோ ஒன்று இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. HUNOVA என்ற இந்த ரோபோவில் அமர்ந்தோ, நின்ற நிலையிலோ இருக்கும் போது உடலில் ஏற்படும் மூட்டுப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பயோ மெட்ரிக் மூலம் கண்டுபிடித்து சொல்லிவிடுமாம்.

சோகத்தை வெளிப்படுத்த

ஒரு நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், தீர்ப்புக்கு பயன்படுத்திய பேனாவை உடைத்து விடுவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது கடைபிடிக்கப்பட்டு வந்த முறைதான் இது. இதற்கு காரணம், உயிரை குடித்த நிப்பை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்பதற்காகவும், சோகத்தை வெளிப்படுத்தவும் இதை செய்து வந்துள்ளனர். ஆனால், நமது இந்திய சட்டப் புத்தகத்தில் எந்த இடத்திலும் மரண தண்டனை அளித்த பிறகு பேனா நிப்பை உடைக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை. ஆங்கில யர்கள் ஆட்சிக் காலத்தில்தான் இந்த முறை பின்பற்றப்பட்ட து. அதற்காக நாமும் பின்பற்ற வேண்டுமா என்ன?.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago