முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய அவதாரம்

கலை,விஞ்ஞானம்,அறிவியல், என இருந்துவரும் ரோபோக்களின் சேவை தற்போது விவசாயத்திலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் விதை விதைத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், களையெடுத்தல், அறுவடை செய்தல் என அனைத்து விவசாய பணிகளையும் ரோபோவே செய்துள்ளது. இதற்கான சாதனையை இங்கிலாந்தின் ஹார்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோனாதன்கில் தலைமையிலான குழுவினர் படைத்துள்ளனர். இந்த ரோபோக்கள் பார்லியை விதைத்து சமீபத்தில் அறுவடை செய்தது. இவை பீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ரோபோக்கள் மூலம் அதிகளவில் உணவு உற்பத்தியை பெருக்க முடியும். இதன்மூலம் உணவு பஞ்சம் இல்லாத உலகை உருவாக்க முடியுமாம்.

நுண்ணோக்கியை கண்டு பிடித்தவர் யார் தெரியுமா

ஆண்டனி வான் லியூவென்ஹாக் (Antonie van Leeuwenhock) என்ற டச்சுக்காரர் 1670ஆம் ஆண்டு வாக்கில் சிறு கண்ணாடி வில்லையைப் பயன்படுத்தி முதலாவது நுண்ணோக்கியைக் கண்டுபிடித்தார். பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்ட முதலாவது நுண்ணோக்கியைக் கண்டவர் இவரே. மிக நுட்பமான பொருட்களையும் பல்லாயிரம் மடங்கு பெரிதாகக் காட்டும் திறன் வாய்ந்த நுண்ணோக்கிகளும் இப்போது உள்ளன. தாவரத்தின் உயிரணுக்கள் (plant cell) போன்றவற்றை நுண்ணோக்கியின் துணையின்றிக் காண இயலாது என்பதை நாம் அறிவோம்.

வந்து விட்டது தலைமுடிக்கும் மவுசு கேசத்தில் தயார் செய்த ஆடைகள் டிரெண்டிங்

விலங்குகளின் தோல்களையும், ரோமங்களையும் கொண்டு ஆடைகள் தயார் செய்தது பழைய காலம். பின்னர் பருத்தியையும் மரத்திலான நார்களையும் பயன்படுத்தி ஆடைகள் செய்வது தற்காலம். ஆனால் மனித கேசத்தில் நவீன ஆடைகளை தயாரிப்பதுதான் தற்போது நியு டிரெண்டிங்.  ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் Zsofia Kollar என்பவர்தான் இந்த புதிய ஐடியாவுக்கு சொந்தக்காரி. தற்போது ஜவுளி உற்பத்தியின் வயிற்றை கலக்கியுள்ள இந்த புதிய ஆடை வடிவமைப்பு பிரபலமாகத் தொடங்கியுள்ளது. மேலும் பசுமை ஆடை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத ஆடை என்ற பெயரில் பல்வேறு ரகங்கள் சந்தையில் குவிந்து வரும் வேளையில் உண்மையிலேயே இது ஒரு மாற்றுதான் என்கிறார் இவர். முடி, அதன் அளவு, நச்சுத்தன்மையற்ற தன்மை, அதிக இழுவிசை வலிமை, வெப்ப இன்சுலேட்டர், நெகிழ்வுத்தன்மை, இலகுரக மற்றும் எண்ணெயை உறிஞ்சும் திறன் ஆகியவற்றின் காரணமாக, ஜவுளி உற்பத்தி முறைக்கு ஒரு சிறந்த சேர்க்கையாக அமைகிறது என்று ஜவுளித்துறையின் தலையில் தூக்கி கல்லை போடுகிறார். ஜவுளி உற்பத்தியால் ஏற்படும் ரசாயன மாசுபாட்டிலிருந்து விலகி இது முற்றிலும் இயற்கையானதாக இருக்கும் என்கிறார். தற்போது இவரது நவீன ஆடை ரகம் ஜெட் வேகத்தில் டிரெண்டாகி வருகிறது.

வாழைப்பழ டயட்

வாழைப்பழம் நார்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்களை கொண்டது. 12 நாட்கள் தினமும் வெறும் வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடல் மிகுந்த ஆரோக்கியம் உடையதாகவும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறையும். இந்த டயட் மேற்கொள்ளும் போது. கட்டாயம் ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பச்சை கீரை வகைகள் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

வேடிக்கை பெண்

அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கரோல் சான்டே பி, தனது வீட்டிற்கு அருகில் உள்ள சாண்டா ஃபே ரயில் நிலையத்தின் மீது 2011 முதல் காதல் வயபட்டார். ’கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து 2015-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த ரயில்வே ஸ்டேஷனை திருமணம் செய்து கொண்டேன்’ என்று  கரோல் தற்போது கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்த்ராக்ஸ் தீவு

வடக்கு ஸ்காட்லாந்தில் இருந்து 0.6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது க்ரூய்நார்ட் தீவு. 2-ம் உலக போரின் போது பிரிட்டிஷ் இராணுவ ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட இரசாயன ஆயுதங்கள் பரிசோதனை செய்ததால் அந்த தீவு முற்றும் நாசமானது. இதனால் 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை மக்கள் அங்கு செல்ல அஞ்சுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்