முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொடிய உயிர் கொல்லியான எயிட்ஸ்க்கு எதிராக தகவமைத்து கொண்ட மனித உடல்

இன்றைக்கு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய வைரசான கொரோனாவைப் போல சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெச்ஐவி எனப்படும் எய்ட்ஸ் நோய் உலகையே அச்சுறுத்தியது. தற்போது போலவே மனித நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சலூன் கடைகளில் தனித்தனி ரேசர்களில் சவரம் செய்வது தொடங்கி, மருத்துவ மனைகளில் டிஸ்போசபிள் சிரிஞ்ச் எனப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் ஊசி என நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தன. இந்நிலையில் தற்போது அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹெச்ஐவி தொற்றுக்கு  ஆளாகி எந்தவித மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் உடல் நலம் தேறியுள்ளார். இது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலில் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான செல்களை பரிசோதித்த போதிலும் கூட அவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது தடமின்றி அடியோடு மறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இது உலகில் இரண்டாவது சம்பவம் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.  இது தொடர்பான மருத்து ஆய்வு கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அப்பெண்ணின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எய்ட்ஸை வெற்றிகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது படிப்படியாக பிறருக்கும் தோன்றலாம். அதே போல எதிர்காலத்தில் கொரோனாவையும் இந்த மனித உடல் வெற்றி கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.

மூட்டை பூச்சிகளை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

இரவில் நமது தூக்கத்தை கெடுத்து கடும் எரிச்சலையும் மன உளைச்சலையும் கொடுப்பதுடன் நமது ரத்தத்தையும் பதம் பார்ப்பவை மூட்டை பூச்சிகள். இன்றை கால கட்டத்தில் நகர்ப்புறங்களில் மூட்டை பூச்சிகள் அருகிவிட்டாலும் (அதற்கு பதிலாக கொசுக்கள்) ஊரக பகுதிகளில் ஜாம் ஜாம் என்று வாழ்க்கை நடத்தியே வருகின்றன. இவை பூமி பந்தில் நெடுங்காலமாக உயிர்த்திருக்கும் ஜீவராசி என்றால் ஆச்சரியம் தானே... அதாவது மூட்டை பூச்சிகள் டினோசர்கள் வாழ்ந்த கால கட்டம் முதல் இந்த பூமியில் இருந்து வருகின்றனவாம்... அதாவது 115 மில்லியன் ஆண்டுகளாக வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பார்க்க சாதாரணமாக நமது படுக்கைகளில் காணப்படும் மூட்டை பூச்்சிகளின் வரலாறு மிகவும் சிக்கலானது என்கிறது விலங்கியல் பரிணாமவியல்... என்ன சரிதானே.

புதிய தீர்வு

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் உள்ள யுனிவர்சிடட் கரோல்ஸ் 3டி மாட்ரிட் என்ற நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் பிரைலி மூலம் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆப் உருவாக்கி அதன் மூலம் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் டி.வி. நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதன் சோதனை ஓட்டம் மாட்ரிட் நகரில் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்தது.

ஈறு பிரச்சனையா?

நீண்ட நாட்களாக பல் ஈறு பிரச்சனை உள்வர்களுக்கு மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது எனவும், சாதாரன ஈறு பிரச்சனை உள்வர்களுக்கு இதயக்கோளாறுகள் ஏற்படும் ஆபாயம் உள்ளது என்றும், மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, இப்பிரச்சனையில் இருந்து விடுபட தினமும் இருமுறை பல்துலக்க வேண்டுமாம்.

புதிய எரிபொருள்

பாசியின் மூலம் விமான எரிபொருளை உருவாக்கியுள்ளனர் ஜப்பான், யூக்ளினா நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். அந்த வகை பாசியிலிருந்து தயாரிக்கப்படும் வேதியியல் கலவையை விமானத்தில் எரிபொருளாகப் பயன்படுத்த முடியுமாம். இந்த கலவை மூலம் ஆண்டுக்கு 33,000 கலோன்கள் எரிபொருள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

ட்ரோன் ஆம்புலன்ஸ்

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அக்ரோ நிறுவனம் ஒன்று பறக்கும் ஆம்புலன்சை உருவாக்கியுள்ளது. நோயாளியையும், உடன் ஒரு மருத்துவ உதவியாளரையும் சுமந்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உள்ளே லைவ் கேமரா வசதியும், ஆடியோ கனெக்‌ஷனும் இருப்பதால், மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்குள் நோயாளியின் நிலைமையை ஆராய்ந்து, தகுந்த மருத்துவ ஆலோசனைகளை உதவியாளருக்கு கொடுக்க முடியும். இந்த ட்ரோன், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அவசர காலத்தில் சிட்டாய் பறக்கும் இந்த ட்ரோனுக்கு ஓட்டுனர் இல்லை மற்றொரு ஆச்சரியம். ஜி.பி.எஸ் வைத்து லொகேஷனை அடையாளம் கண்டு, தானாக பறந்து செல்கிறது. இதன் விலை சுமார் ஆறு கோடியாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்