முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

குரல் தேடல்

இணையதளத்தில் தகவலை தேட வேண்டுமென்றால் குரல்வழி மூலம் கூகுள் தேடுபொறியில் தேடலாம். குரல்வழி தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி மற்றும் உருது ஆகிய 8 மொழிகளை கூகுள் சேர்த்துள்ளது.

சிவப்பு பாண்டா கரடி

சிவப்பு பாண்டா  கரடிகள் கிழக்கு இமயமலை மற்றும் தென்மேற்கு சீனாவில் காணப்படுகின்றன. இனச்சேர்க்கை காலத்தைத் தவிர தனிமையில் வாழக்கூடியது.  இது அழியும் அபாயத்தில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் எண்ணிக்கையில் 40% குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகம் வேட்டையாடுதல் மற்றும் வாழ்விடங்கள் அழிந்து போகுதல் போன்ற காரணங்களால் தற்பொழுது காடுகளில் 10,000 க்கும் குறைவான ரெட் பாண்டா காணப்படுகிறது.  சிவப்பு பாண்டாக்களால் சயனைடை கூட ஜீரணிக்க முடியும். இவைகள் 40 வெவ்வேறு வகையான மூங்கில்களை ஜீரணிக்க கூடிய ஜீரண மண்டலத்தை கொண்டது. இந்த மூங்கில்களில் ஏராளமான சயனைடு சேர்மங்கள் இருக்கும். சயனைடை செரிமானம் செய்யக்கூடிய குடல் நுண்ணுயிரிகளின் கலவை சிவப்பு பாண்டாக்களின் குடலில் உள்ளது. சிவப்பு பாண்டாக்கள் கடல் மட்டத்திலிருந்து 7,800 முதல் 12,000 அடி வரையிலான உயரமான இடங்களில் குளிர்ச்சியான அகன்ற இலைகள் மற்றும் ஊசியிலையுள்ள காடுகளுக்குள் வாழ்ந்துவந்தது தெரியவந்துள்ளது. இதையும் தாண்டி ஒரு சில சிவப்பு பாண்டாக்கள் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 14,400 அடி உயரத்தில் காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டது

புதிய முயற்சி

டிடபிள்யூடிஎம் - பிஓஎன் பைபர் தொழில்நுட்பம் (TWDM-PON fibre technology) என்ற அடுத்த தலைமுறை பைபர் இணைப்பு மூலம் விநாடிக்கு 40 ஜிபி வேகத்தில் தரவிறக்கம் மற்றும் பதிவேற்றும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளில் மிகக்குறைந்த இணைய வேகத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் சராசரி இணைய வேகம் 2.5 எம்பிபிஎஸ் (mbps) ஆகும்.

இப்படியும் சிலர்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரூ.6000 கோடி மதிப்புடைய ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்யாம் தோலாக்கியாவின் மகன் ஒருவர் ஒரு மாதம் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். செகந்திராபாத்தில் 100 ரூபாய் வாடகை அறையில் தங்கிய அவர் காலணி கடைகளில் பணியாற்றியும், ரிக்ஷா தொழிலாளிகளுடன் தங்கியும் இந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

எளிய வழி இருக்கு

தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கண்டறிய, போன் தொலையும் முன்னரே உங்களது ஸ்மார்ட்போனின் கூகுள் செட்டிங்-ஐ செயல்படுத்தி இருக்க வேண்டும். மேலும் லொகேஷன் ரிபோர்டிங் ஆப்ஷன் செட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும். தொலைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை டிராக் செய்ய முதலில் கணினி அல்லது லேப்டாப் மூலம் பிரவுஸர் ஒன்றை ஓபன் செய்து, பின் உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பதிவு செய்திருந்த கூகுள் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் செய்து, இறுதியாக கூகுளில் "find my phone" என டைப் செய்தால் உங்கள் ஸ்மார்ட்போன் இருக்கும் இடம் தெரியும். துல்லியமாக அறிந்து கொள்ள "Ring button" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

நோய் அறியா நகரம்

வட பாகிஸ்தானில் ஹூஞ்குட்ஸ் எனுமிடத்தில் அலக்ஸாண்டர் தி கிரேட்-ன் வழிதோன்றல்கள் என கருதப்படும் ஹூஞ்சா எனும் மக்கள் வாழும் இடம்தான் ஹூன்சா பள்ளதாக்கு. இங்குள்ளவர்கள் 70 வயது வரையிலும் இளமை, ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கின்றனர். பெண்கள் 65 வயதிலும் கருத்தரிக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் இயற்கை உணவே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!