முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இரு மலைகளுக்கு நடுவே கயிறு கட்டி அசால்ட்டாக நடந்து சென்ற வாலிபர்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் Nathan Paulin. இவருக்கு உயரத்தில் கயிறு கட்டி நடப்பது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி அத்தனை விருப்பம். சிலருக்கு தரையில் நடப்பதற்குள்ளேயே கண்ணை கட்டிக் கொண்டு வந்து விடும். ஆனால் மனுசன் எத்தனை உயரத்திலும் ஒரு ஒல்லியான கயிறை கட்டிக் கொண்டு சாதாரணமாக நடந்து சென்று விடுகிறார். இவர் ஏற்கனவே ஈபிள் டவர் உள்ளிட்ட பல்வேறு உயரமான இடங்களில் கயிறு கட்டி நடந்தவர். தற்போது  ரியோடி ஜெனிரோவில் உள்ள பாபிலோனியா மலைக்கும் உர்கா மலைக்கும் இடையே கயிறு கட்டி அசால்ட்டாக நடந்து சென்ற வீடியோ வேகமாக பரவி வருகிறது.  இரண்டுக்கும் இடையிலான தொலைவு 500 மீட்டர். உயரம் 264 அடி அதாவது 80 மீட்டர். மேலேயிருந்து கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது. மனுசன் அதற்கெல்லாம் அசந்த ஆள் இல்லை. ஜாலியாக நடந்து மலையை கடந்து விட்டார்.

செல்ஃபி எடுக்க

செல்ஃபி எடுப்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய செல்போன் செயலியை ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதில் உள்ள அல்காரிதம், செல்ஃபி எடுக்கும் போது கேமிராவை எங்கு வைப்பது, எந்த திசையில் சரியான ஒளி கிடைக்கிறது, முகத்தின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொள்கிறது. அதன்மூலம் சிறந்த செல்ஃபிக்களை எடுக்க பயனாளர்களுக்கு உதவுமாம்.

சுவாரசிய பயணம்

சீனாவில் இருந்து விமானம் ஒன்று, 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி புறப்பட்டு, அமெரிக்காவின்  சான்பிரா ன்சிஸ்கோ நகரில் 2016 டிசம்பர் 31-ம் தேதி தரையிறங்கியு ள்ளது. இதற்கு அமெரிக்காவில் புத்தாண்டு கடைசியில்  பிறந்ததுதான் காரணம். இதனா ல்தான் விமானம், முந்தைய ஆண்டின் கடைசி தேதியில் தரையிறங்கியுள்ளது.

64 ஆண்டுகளுக்கு பின்...

உலகில் வாழும் அரிய வகை பாம்புகளில் ஒன்று தொண்டை சுருக்கு பாம்பு. இந்த அரிய வகை பாம்புகள் பிரேசில் காடுகளில் யார் கண்களுக்கு படாமல் உயிர்வாழ்ந்து வந்தது. இந்நிலையில், அரிய வகை தொண்டை சுருக்கு பாம்பு ஒன்று 64 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாம்பு ஒரு பெண் இனம். பாம்பின் நீளம் 1.7 மீட்டர். எடை 1.5 கிலோகிராம்.

நாம் எப்போதும் இறந்த காலத்தில் தான் வாழ்கிறோம்

நம்மூர் ஞானிகள் தொடங்கி ஆன்மிக பேச்சாளர்கள் வரை  அனைவரும் விழிப்புணர்வு, இங்கே, இப்போது என்று பேசுவதை கேட்டிருப்போம். அதாவது எப்போதும் நிகழ்காலத்தில் அறிவுப்பூர்வமான விழிப்புணர்வுடன் இருப்பதையே இவ்வாறு கூறுகிறார்கள் என ஒரு வாறு நாம் அனுமானிக்கலாம். இருந்த போதிலும் நமது எண்ணங்களும், நினைவுகளும் கடந்த காலத்திலேயே இருக்கின்றன. நிகழ்காலத்தோடு நாம் கொள்ளும் தொடர்பு சற்று தாமதமாகத்தான் நிகழ்கிறது என ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பேலார் மருத்துவ கல்லூரியில் டாக்டர் டேவிட் ஈகிள்மேன் என்பவர் மேற்கொண்ட ஆய்வில் நிகழ்காலத்திலிருந்து நாம் சுமார் 80 மில்லி விநாடிகள் பின்தங்கியே இருக்கிறோம் என்று கண்டறிந்துள்ளார். அதாவது சம்பவம் நடப்பதற்கு சற்று பிந்தி நாம் இறந்த காலத்தில் இருக்கிறோம்். நாம் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே சம்பவங்கள் நடந்து முடிந்து விடுகின்றனவாம். என்ன கொடுமை சார் இது...

தெரிந்தும் தெரியாதது

சராசரியாக ஓர் ஆண் சிங்கம் 250 கிலோ வரை இருக்குமாம். இதன் கர்ஜிக்கும் சப்தம், 8 கி.மீ வரை எதிரொலிக்கும். காட்டில் வாழும் ஆண் சிங்கம் பத்தில் இருந்து பதினான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும். பெண் சிங்கங்களுக்கு பிடரிமயிர் அதிகமாக இருக்கும். பூனை குடும்பத்தில் புலிக்கு அடுத்து 2-வது பெரிய விலங்கு சிங்கம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்