முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இருதயம் கவனம்

வருடாந்திர மருத்துவ பரிசோதனை செய்வது, அன்றாட உணவில்  உப்பின் அளவினை சற்று குறைத்து எடுத்து கொள்ளுதல். கைவீசி நடத்தல், படிகட்டு ஏறி இறங்குதல்,  டி.வி. பார்க்கும் பொழுது ஜாக் செய்வது,  வீடு பெருக்கி துடைப்பது,   குழந்தைகளுடன் பார்க்கிற்கு சென்று விளையாடுதல், இரவு உணவுக்குப் பிறகு சிறிது நடத்தல் போன்ற எளிய பயிற்சிகள் இருதயத்தை தீங்கு ஏற்படாமல் பாதுகாக்கும்.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாட்டால் சூரிய மின்சக்தி உற்பத்தி 25 சதவீதம் வரை பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சீனா, அரேபிய தீபகற்பம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காற்று மாசுபாடு அதிகம் உள்ளதால் மின்சக்தி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

போக்குவரத்து விளக்குகள் எப்போது வந்தன?

ஜே.பி.நைட் என்பவர் லண்டன் மாநகரில் 1868ஆம் ஆண்டு இப்போக்குவரத்து விளக்குகளைக் கண்டு பிடித்தார். மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் இவ்விளக்குகள் நிறுவப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாளில் மோட்டார் வாகனங்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கவில்லை. குதிரையை அல்லது குதிரை பூட்டிய வண்டிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.பச்சை, சிகப்பு ஆகிய இரு வண்ணங்கள் மட்டுமே அப்போது பயன்படுத்தப்பட்டு வந்தன. உருளையில் நிரப்பப்பட்ட வாயுவினால்தான் அவ்விளக்குகள் எரிந்து வந்தன; இவ்வமைப்பு அப்போது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், காவல் துறையைச்சார்ந்த வில்லியம் பாட்ஸ் என்பவர் இரயில்வே சமிக்கைகளின் அடிப்படையில் போக்குவரத்து விளக்குகளை அமைக்க முயற்சி செய்தார். பச்சை, சிகப்பு, காவி பூசிய மஞ்சள் ஆகிய நிறங்களுடன் கூடிய விளக்குகளை நிறுவி இவர் தமது முயற்சியில் 1920ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1923ஆம் ஆண்டு போக்குவரத்து விளக்குகள் நிறுவப்பட்டன. முதலாவது தானியங்கிப் போக்குவரத்து விளக்கு 1927ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிறுவப்பட்டது.

புதிய வசதி

சுமார் 200 கோடி பயனாளர்களை கவர்ந்துள்ள ஃபேஸ்புக், தனது வாடிக்கையாளர்களுக்கு ‘மார்க்கெட் ப்ளேஸ்’ எனும் புதிய சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் பொருட்களை வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும். இச்சேவையை மேலும் 17 ஐரோப்பிய நாடுகளில் அது விரிவுபடுத்தியுள்ளது.

முதல் முதல்வர்

நாட்டின் உயரிய விருது பாரத ரத்னா விருது. இந்த விருதினை பெற்ற முதல் இந்திய, முதல்வர் என்ற பெருமை நமது தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜிக்கு சேரும். இவர் பக்தி பாடலை ஒன்றை எழுதியுள்ளார்.அந்த பாடல் குறையொன்றும் இல்லை  மறை மூர்த்தி கண்ணா என்பதாகும்.

தூக்கம் கெடும்

தீவிரமான எடை பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடல் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் அதே சமயம் உடல் மற்றும் மனம் அதிகப்படியான எடையைத் தூக்கியதால், இரவில் தூங்குவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். மேலும் மனநிலையில் ஏற்றஇறக்கங்கள் ஏற்படும். மொத்தத்தில் ஒட்டுமொத்த உடலின் செயல்பாடும் பாதிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்