முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்?

சிலருக்கு காபி இல்லை என்றால் அன்றைய தினம் அத்தனை சீக்கிரம் விடியாது. வேறு சிலருக்கோ வேலையும் ஓடாது, மூளையும் இயங்காது. ஆகவே காபி குடித்து நாளை உற்சாகமாக வைத்துக் கொள்பவர்கள் உலகம் முழுவதும் ஏராளமானோர் நிரம்பி வழிகின்றனர். அது, சரி, காபி குடித்தால் உடலுக்கு நல்லதா கெட்டதா, இதயத்தை பலப்படுத்துமா, பலவீனப்படுத்துமா இப்படி ஆயிரம் கேள்விகள் நம்மில் பலருக்கும் எழுவது சகஜம். அத்தகைய காபி குறித்த பல்வேறு உடல்நலம் சார்ந்த கருத்துகள் நிலவி வந்த நிலையில் ஒருவர் ஒருநளைக்கு 25 கப் காபி குடித்தாலும் ஒன்றுமே ஆகாது என்கிற புதிய ஆய்வறிக்கை காபி பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  காபியில் அதிகளவு காஃபின் இருப்பதால் இதய நோய் உண்டாகும் என்ற கருத்து நிலவியது. திடீரென்ற மாரடைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், உலகளவில் கோடிக்கணக்கானோர் தினமும் காபி அருந்தி வருகின்றனர்.  இந்நிலையில், 8,000 பேரை தேர்வு செய்து லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, தினசரி ஒரு கப், மூன்று கப், பல கப் என்று காபி அருந்துபவர்களை தரம் பிடித்து ஆய்வு மேற்கொண்டதில் யாருக்கும் காபியால் எந்த பாதிப்பும் உடலில் ஏற்படவில்லை.  இதனால், நாள் ஒன்றுக்கு 25 கப் வரை காபி அருந்தினால் கூட அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் காபி எனும் தேசிய பானம் காப்பாற்றப்பட்டுள்ளதாக குதூகலிக்கின்றனர் காபி பிரியர்கள்!

எரிமலை, volcano, lava

உலகத்துல மொத்தம் சுமார், 1,500 எரிமலைகள் தொடர்ந்து (பல வருடங்களாக) தீக்குழம்பைக் கக்கிக்கிட்டே இருக்குதாம். எரிமலையின் பியூமீஸ் என்னும் பாறை மட்டுமே தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது. சூப்பர் எரிமலைகள் எனப்படுபவை வெடித்துச் சிதறும்போது,பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் தீமழை பொழிவதோடு, பருவநிலை மாற்றங்களையும் உருவாக்கும் தன்மை கொண்டவையாம். இத்தகைய ஒரு எரிமலை, அமெரிக்காவின் யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் இருக்கிறதாம். இது வெடிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். உலகின் மிகப் பயங்கரமான எரிமலை, இந்தோனேஷியாவின் சும்பாவா (Sumbava)தீவில் உள்ள, டாம்போரா(Tambora) மலையில்தான் வெடித்ததாம். 1815 ஆம் ஆண்டு வெடித்துச் சிதறிய இந்த எரிமலைக்கு, ஒரு லட்சம் மக்கள் பலியானார்களாம்! அந்நாட்டில் சுமார் 76  எரிமலைகள் இருக்கின்றன என்கிறது ஒருஆய்வு. ஐஸ்லாந்து நாடு, எரிமலைகளின் மேலேதான் உட்கார்ந்து இருக்கிறதாம். எரிமலைகள் வளரும் தன்மையுடையனவாம்!  உலகின் மிகப்பெரிய எரிமலை ஹவாயின் “மாய்னா லோவா (Mauna Loa)”.

பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

பாலூட்டிகளை போல அல்லாமல், பெரும்பாலான பறவைகளுக்கு சிறுநீர் பைகள் கிடையாது. கழிவுகளை வெளியேற்ற சிறுநீரை வெளியேற்றுவதை காட்டிலும் குழம்பு வடிவிலான எச்சத்தை அவை கழிவாக வெளியேற்றி விடுகின்றன. அதே நேரத்தில் தீக்கோழிகள் மற்ற பறவைகளிடமிருந்து சற்றே மாறுபடுகின்றன. அவைகளுக்கும் சிறு நீர் பைகள் இல்லை என்ற போதிலும், பாலூட்டி விலங்கினங்களைப் போலவே தீக்கோழியும் சிறுநீரையும், எச்சத்தையும் முற்றிலும் தனித்தனியாக பிரித்து வெளியேற்றுகின்றன என்பது ஆச்சரியம் தானே..

ஆராரோ... ஆராரோ...

தூக்கம் வராமல் தவிப்போருக்கு தீர்வாக இப்போது ரோபோ தலையணை வந்துள்ளது. சோம்நாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, மூச்சுவிடுவதை சீராகக் கண்காணித்து, தூக்கத்தை சீராக்குகிறது. மேலும் இது சுவாசத்தைக் கட்டுப்படுத்தி அமைதியான, ஆழமான தூக்கம் வர செய்யும். பாதியில் எழுந்தால்கூட இந்த தலையணை தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறதுதான் ஆச்சரியம்.

மிருதுவான பாதங்களுக்கு

பாதம் மிருதுவாக, மென்மையாக இருக்க லிஸ்டெரின் கால் கப் மவுத் வாஷ், வினிகர் சம அளவு எடுத்து கலந்து, ஒரு டப்பில் பாதம் நனையும் வரை சுடுநீரை நிரப்பி, பின் அதில் மவுத் வாஷ் கலவையை கலக்கி பாதத்தை மூழ்க வைக்க வேண்டும்.. 20 நிமிடம் கழித்து பாத்தை ஸ்க்ரப் செய்தால் பாதங்கள் மென்மையாக இருக்கும்.

புதிய வசதி

ஆண்ட்ராய்ட், ஐபோன்களில் வாட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் புதிய வசதி, நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், வாட்ஸ் அப் கால் பேசிகொண்டிருக்கும் போதும் Low பேட்டரி என இருந்தால் அதனை நண்பர்களுக்கு Notification-களில் தெரியபடுத்தும் அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago