முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகிலேயே மிகவும் டெர்ரரான நாய்

புல் வகை நாயும் டெர்ரிஸ் வகை நாயும் சேர்ந்த கலப்பின நாய்தான் பிட்புல். நம்மூரில் நடத்தப்படும் சேவல் சண்டைகளைப் போல ஐக்கிய நாடுகளில் இந்த நாய்களைப் பயன்படுத்தி பிட்புல் சண்டைப்  போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1835-ம் ஆண்டு பிட்புல்லை பயன்படுத்தி போட்டிகள் நடைபெறுவதற்கு  அமெரிக்கா  மற்றும் பிரிட்டன் நாடுகள் தடைவிதித்தன. ஆனாலும், இப்போது வரை சட்டத்துக்குப் புறம்பாக பிட்புல் சண்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  பிட்புல் நாய்கள் அடிப்படையில் மூர்க்க குணம் கொண்டவை. இவ்வகை நாய்களை ஒருகாலத்தில் வேட்டையாடுவதற்குப்  பயன்படுத்தியிருக்கிறார்கள். சண்டைகளுக்கும், வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தப்பட்டதால் இவ்வகை நாய்களை பெரும்பாலும் வீடுகளில் வளர்ப்பதில்லை.  உலகிலேயே மிக ஆபத்தான நாய் பிட்புல் தான். அந்நாய், மனிதர்கள், மிருகங்கள் என்று பாரபட்சமின்றி வாயில் கவ்வ தொடங்கி விட்டால் உயிர் போகும் வரை விடாது. இந்த நாயால், கடந்த 2005 ஆம் வருடத்திலிருந்து 2014ஆம் வருடம் வரை, அமெரிக்காவில் சுமார் 508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 203 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

பறக்கும் கார்கள்

புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் விரைவில் பறக்கும் கார்கள் தயாராகவுள்ளது. ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியில் இடம்பெற்ற ‘பாப் அப் சிஸ்டம்’ (Pop.Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த ‘பாப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு உருவாகாத முறையில் பேட்டரியால் இயங்க கூடியது. கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கி செல்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேகமாக கடந்து செல்ல, ‘டுரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

மகளிர் நினைவாக

உலக மகளிர் தினத்தன்று, அமெரிக்காவில் பல அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை. பெண்களின் துணிச்சலைப் போற்றும் விதமாக, நியூயார்க் நகரில் ஒரு சிறுமியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. சீறும் காளைச் சிலைக்கு எதிராக, அச்சமின்றி சிறுமி நிற்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது

430 கோடி ஆண்டுகள் பழசு

430 கோடி ஆண்டுகள் பழமையான பாக்டீரியா படிமங்கள் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடக்கு கியூபெக் பகுதியில் அமைந்துள்ள ஹட்சன் கடற்கரையோரம் இந்த படிமங்கள் கிடைத்துள்ளன. பூமி தோன்றிய சிறிது காலத்திலேயே இந்த பாக்டீரியாக்கள் உருவாகியிருக்கலாம் என இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

தீயணைப்பு படை வீரராக பணியாற்றியஹாலிவுட் நடிகர் யார் என்று தெரியுமா?

டெஸ்பரேடோ போன்ற புகழ் பெற்ற படங்களில் நடித்தவர் ஹாலிவுட் நடிகரான ஸ்டீவ் பஸ்செமி. இவர் 1980 முதல் 1984 வரையிலும் நியூயூார்க் நகரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் பணியாற்றினார். பின்னர் நடிகராகி பெரும் பணமும் புகழும் ஈட்டினார். இந்த சூழலில் நியூயார்க் நகரில் செப்டம்பர் 2011 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு, இவர் தானாகவே விரும்பி சென்று தீயணைப்பு சேவைகளில் ஈடுபட்டார். இதற்காக சக வீரர்களுடன் இணைந்து சுமார் 12 மணி நேரம் வரையிலும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். செப்டம்பர் தாக்குதலில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago