முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலக சாதனை

டொரண்டோ நகரில் 404 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல மாறுவேடம் அணிந்து வந்து உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்னர் 99 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல் இருந்ததே சாதனையாக இருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 404 பேரும் - ஐன்ஸ்டீன் போலவே பிளேசர், டை வெள்ளை விக் மற்றும் மீசை அணிந்திருந்தனர்.

முறையான பயிற்சி

தொடை பகுதியை வலிமையாக்கும் பயிற்சிகள் ஐஸோடானிக், ஐஸோமெட்ரிக் என்று இரு வகைப்படும். பயிற்சியின்போது குறிப்பிட்ட நிலையில் நிறுத்தி, தசைகளுக்கு இறுக்கம் தந்து வலு சேர்ப்பது ஐஸோமெட்ரிக். இது முன் தொடையை வலிமையாக்கும். தசைக்கும் மூட்டுக்கும் தொடச்சியாக அசைவு கொடுத்து வந்தால் அது ஐஸோடானிக். இது பின் தொடையை வலுப்படுத்தும்.

சானிடைசர்கள் : கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்

சானிடைசர் பயன்படுத்துவதால் சில தொல்லைகள் ஏற்படலாம். சானிட்டைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் உள்ளதால் வைரஸ்களை கொல்லும் ஆற்றல் படைத்தவை. ஆனால் சில சுத்திகரிப்பான்களில் ட்ரைக்ளோசன் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரைக்ளோசன் பூச்சிக்கொல்லிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு வகை வேதிப்பொருள். இது விஷத்தன்மைக் கொண்டது. இது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல. இத்தகைய சுத்திகரிப்பான்களை அடிக்கடி பயன்படுத்திவிட்டு ஏதேனும் உணவைச் சாப்பிடுவதால் இது எளிதில் நம் உடலில் செல்லக்கூடும். இதனால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். தசைகள் மற்றும் கல்லீரலும் பாதிக்கப்படும். இதனால் செரிமான அமைப்பும் பாதிப்படையும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோயெதிர்ப்பு சக்தியும் பாதிப்படையும். இதனால் உடலும் பலவீனமடையும். எனவே சாப்பிடுவதற்கு முன்பு சானிட்டீசரைப் பயன்படுத்தி கை கழுவுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். முகத்தின் அருகில் கையைக் கொண்டு செல்வதினாலும் அந்த ரசாயனங்கள் சுவாசப்பாதை வழியே உடலினுள் நுழைந்து சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே ட்ரைக்ளோசன் இல்லாத சானிடைசரை வாங்கி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நமக்காகவே இருக்கிறது இயற்கையான சுத்திகரிப்பான்களான வேப்பிலையும், மஞ்சளும். இரண்டையும் நீரில் கலக்குங்கள்.. உடலை கைகளை கவலையின்றி கழுவுங்கள்.

தண்டவாள கற்கள்

வெப்பம், நிலஅதிர்வு காரணமாக ரயில் தன்டவாளங்கள் சுருங்கி, விரிவதால், தண்டவாளங்கள் விலக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கவே ஜல்லிக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீரின் தேக்கத்தால் தண்டவாளங்கள் மூழ்காமல் இருக்கவே ஜல்லிக் கற்கள் மீது தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன.

முதுமையை தவிர்க்க ...

நம் என்றும் இளமையாய் இருக்க பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ள மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்களான பூசணி, மாம்பழம், சர்க்கரை வள்ளிக் கிழங்கை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், கொழுப்பு குறைந்த சோயா பீன்ஸ், சோயா மாவு, சோயா பால் போன்றவை எடுத்துக்கொண்டால் நல்லது.

ரேடியோ அலைகள் மூலம் ...

உலகின் பேட்டரி இல்லா முதல் செல்போனை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.  சுற்றுப்புறத்தில் உள்ள ரேடியோ சிக்னல்கள் மற்றும் ஒளி ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்று இயங்கும் வகையிலான புதிய செல்போன் ஒன்றை வடிவமைத்து ஆய்வாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். அந்த செல்போனைப் பயன்படுத்தி ஸ்கைப் மூலம் வீடியோ கால் பேசி நிரூபித்துள்ளனர்.  ரேடியோ அலைகளில் இருந்து ஆற்றலைப் பெறும் வகையில் செல்போன்களில் சிறிய அளவிலான ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த அலைகளைப் பயன்படுத்தி குரல் பதிவுகளை பரிமாறிக் கொள்ளும் வகையில் செல்போனின் செயல்பாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago