முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முகம் ஜொலிக்க

ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சை, முகம், கழுத்துப் பகுதியைத் துடைத்து எடுத்து, பின், பாதி தக்காளியை எடுத்து சர்க்கரையைத் தொட்டு, முகம் மற்றும் கழுத்தை 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சரும பொலிவு தக்க வைக்கப்படும்.

கற்கால ஓவியங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பாக்கம் மலைத்தொடர் ஒட்டிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது செத்தவரை மலையில் ஆவணம் செய்யப்படாத புதிய பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர்.செத்தவரை ஊரின் தெற்கு மூலையில் செத்தவரை மலைகள் தொடங்கும் இடத்தில் கும்பசுனை என்ற இடத்தில் உள்ள பெரிய பாறையில் இரண்டு இடங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் மற்றும் இதனருகே உள்ள பாறையில் வெண்சாந்து ஓவியமும் இருப்பது கண்டறியப்பட்டது. ஓவியத்தில் மான் ஒன்றும் அதன் அருகே யானை போன்ற ஒரு உருவம் காணப்படுகிறது. மற்றொரு முனையில் உள்ள செஞ்சாந்து ஓவியத்தில் இரு மனிதர்கள் மட்டும் உள்ளனர். மேலும் அருகில் உள்ள மற்றொரு குன்றிலும் ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவையாவும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களாகக் கருதலாம். இதன் காலம் சுமார் 5000 வருடங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

வாட்ஸ் அப்பிலும்...

முன்பு ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நொவ்கட் மாடலில் மட்டும் செயல்படக்கூடிய யுனிகோடு 9 எனும் மென்பொருளானது தற்போது ஆண்ட்ராய்டின் அனைத்து வெர்ஷனிலும் அப்டேட் ஆகியுள்ளது. அதனால் பீட்டா எமொஜிகளான பட்டாம்பூச்சி, தரையில் சிரித்து உருளும் முகம், கோமாளி முகம், வானவில்  என பல புதிய எமொஜிகள் வாட்ஸ் அப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரே செடியில் காய்த்து குலுங்கும் தக்காளி, கத்திரிக்காய்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தினர் தற்போது புதுமையான ஆய்வு ஒன்றை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். பிரிஞ்சால் எனப்படும் கத்திரிக்காய், டோமோட்டோ எனப்படும் தக்காளி என இரண்டையும் கலந்து புதிய கலப்பினமாக பிரிமோட்டோ என்ற புதிய செடியினத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ஒரே செடியில் தக்காளியும் கத்திரிக்காயும் காய்த்து குலுங்குகின்றன. இதில் என்ன விசேசம் என்றால் ஒவ்வொரு செடியிலும் 2.3 கிலோ தக்காளி, 3.4 கிலோ கத்திரிக்காயை அறுவடை செய்ய இயலும். கலப்பின ஒட்டு முறையை பயன்படுத்தி இந்த புதிய செடியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இனி தக்காளிக்கும், கத்திரிக்கும் தனித்தனி தோட்டங்களை உருவாக்க வேண்டியதில்லை. எதிர்காலத்தில் என்னென்னவெல்லாம் நடக்குமோ...

கூடும் ஆயுட்காலம்

பெண்களின் சராசரி ஆயுட்காலம் தொடர்பாக 35க்கும் மேற்பட்ட வளர்ந்த நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவின்படி, நவீன மருத்துவ உலகில் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. 2030-களில் தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின் நாட்டு பெண்களின் சராசரி ஆயுட்காலம் 88 வயதை எட்டக்கூடுமாம்.

ஹாலிவுட் சினிமாக்களில் கழிவறை

இன்றைய ஹாலிவுட் படமானாலும் சரி, வெளிநாட்டு படமானாலும் ஒரு சீன்லயாவது கழிவறை இடம் பெறாமல் போவதில்லை. ஆனால் 1960கள் வரையிலும் அமெரிக்க ஹாலிவுட் படங்களில் கழிவறையே இடம் பெற்றதில்லை. முதன்முதலாக முக்கிய பாத்திரம் ஒருவர் கழிவறையில் காகிதத்தை கசக்கி எறிந்து, தண்ணீரை திறந்து விடுவதை போன்ற காட்சியை சைக்கோ திரைப்படத்தில் ஹிட்ச்காக் அமைத்திருப்பார். அதன் பிறகே ஹாலிவுட் படங்களில், கழிவறை, குளிலறை, ஷவர் போன்றவை இடம் பெற்றன என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago