முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலக சரித்திரம் விரல் நுனியில்

இணையத்தில் இயங்கும் நூலகங்களில் ஒரு வியக்கத்தக்க பயனுள்ள நூலகம் டிஜிட்டல் மீடியா நூலகம். அதன் லிங்க்  http://www.wdl.org/en/. அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா? ஆம், இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் வடிவில் பதிந்து தருகிறது.உலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள், ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல் மீடியாக்களாக இந்த ஆன்லைன் நூலகத்தில் பதிவுகளாகக் கிடைக்கின்றன.இந்த நூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர் வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள், கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப் பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

செல்ல பிராணிகள்

நாய்கள் மனித உடலில் உள்ள கரிம சேர்மங்களின் (organic compounds) வாசனையை வைத்து மனித உடல் சரியாக வேலை செய்யவில்லை என கண்டுபிடிக்கும் சக்தி உள்ளது என ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.உண்மையில் நாய்களுக்கு மனிதனின் புற்று நோயை கண்டறிய முடியும். அத்துடன் விஞ்ஞானிகள் நாய்களை வைத்து நீரிழிவு மற்றும் வலிப்பு நோய்களையும் கண்டறிய முடியுமா என முயற்சி மேற்கொண்டுள்ளனர். இரு ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால் மனிதர்களுக்கு கைரேகை போல் நாய்க்கு மூக்கில் உள்ள ரேகை ஒவ்வொரு நாய்க்கும் வித்தியாசமாக இருக்கும். மனிதர்களை போலவே நாய்களும் கனவு காணும்.

மிகவும் உயரமான மலைப்பிரதேசங்களில் வளரும் அரிய வகை மலர் கண்டுபிடிப்பு

மிகவும் உயரமான இடங்களில் வளரும் அரிய வகை மலரை கண்டறிந்துள்ளனர். சீனாவின் யுன்னான் பிரதேசத்தில் உள்ள துணை ஆல்பைன் மலைப்பகுதியில் சுமார் 3590 மீட்டர் உயரத்தில் இந்த செடி வளர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. Entosthodon elimbatus என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த செடி நான்கு முதல் எட்டி மிமீ உயரம் வரை வளரக் கூடியது. மேலும் பாறைகளின் பிளவுகளில் உள்ள மண்ணில்தான் இது வளருமாம். இந்த விசித்திரமான தாவரம் குறித்த ஆய்வு கட்டுரை அறிவியல் இதழ்களிலும் கடந்த 2020இல் வெளியிடப்பட்டன.

43 நாடுகளில் மன்னராட்சி

ஜனநாயகம், சோஷலிசம், கம்யூனிசம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன யுகத்தில் உலகில் சில நாடுகள் இன்னும் மன்னராட்சியின் கீழ் தான் உள்ளன. அவ்வாறு உலகில் மொத்தம் 43 நாடுகள் இன்றைக்கும் மன்னராட்சியின் கீழ் உள்ளன. அவற்றில் ஜப்பான், ஸ்பெயின், சுவிஸ், பூடான், தாய்லாந்து, மொனாகோ, சுவீடன், நெதர்லாந்து உள்ளிட்ட 43 நாடுகளை உலகில் உள்ள 28 அரச குடும்பங்கள்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்றால் ஆச்சரியம் தானே..

அனைத்துக்கும் ஒன்றே

பென் டிரைவ் போல வந்துள்ள ரிமோட்டினால் டி.வி, மீடியா பிளேயர், லைட், ஏசி என அனைத்தையும் கன்ட்ரோல் செய்யும் புது ரிமோட் வந்திருக்கிறது. செவன்ஹக்ஸ் நிறுவனத்தின் படைப்பு தான் இது. இதன் மூலம் மொத்தம் 25 ஆயிரம் பொருட்களை இயக்கலாமாம். ஸ்மார்ட் ரிமோட் வைஃபை, ப்ளூடூத், இன்ஃப்ரா ரெட் மூலம் பொருட்களை கட்டுப்படுத்துகிறது.  135 மி.மீ நீளமும், 41 மி.மீ அகலமும் கொண்ட ஸ்மார்ட் ரிமோட்டோடு, சார்ஜ் பேஸ், 3 ரூம் சென்சார்கள் உட்பட 10 ஆயிரத்து 156 ரூபாய்க்கு வாங்கி இஷ்டப்படி பொருட்களை ஒன் மேன் ஆர்மியாக கன்ட்ரோல் செய்து கலக்கலாம்.

பரத்வாஜாசனம்

உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முகுது வலியை கட்டுப்படுத்தும் எளிய ஆசனம்தான் பரத்வாஜாசனம்.  இந்த ஆசனம் செய்வதால், முதுகெலும்பை சீராக வளையும் படி செய்கிறது. முதுகெலும்புக்கு வலிமையூட்டப்படுகிறது. முதுகு வலியை கட்டுப்படுத்தி, முதுகெலும்பின் ஆர்த்தரைடீஸை கட்டுப்படுத்துகிறது இந்த ஆசனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago