முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நீந்தி திரியும் வண்ண மீன்களுக்கு மத்தியில் அமர்ந்து சாப்பிடும் உணவகம்

கலர் கலராக வண்ண மீன்கள் காலுக்கு அடியில் சுற்றித் திரிய அதன் மத்தியில் மேஜை நாற்காலி போட்டு சாப்பிடும் அழகிய ஹோட்டல் எங்கிருக்கிறது தெரியுமா.. தாய்லாந்தில் உள்ள ஹோசிமின் நகரில்தான் இப்படி ஓர் அழகிய அனுபவத்தை அளிக்கும் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் கால் பாதம் வரை நிரம்பியிருக்கும் ஹால் ஒன்றில் அழகிய கலர் கலர் மீன்கள் நீந்தி விடப்பட்டிருக்கும் அவற்றின் நடுவில் வாடிக்கையாளர்கள் உணவு அருந்துவதற்கான மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். அதில் அமர்ந்து உணவருந்துவது மிகவும் அற்புதமான அனுபவத்தை அளிப்பதாக உள்ளது.

புராணங்களில் இடம் பெற்றுள்ள பறவைகள் எது தெரியுமா?

எகிப்து புராணங்களில் பா என்ற பறவையும், சாம்பலிலிருந்து உயிர்தெழும் பீனிக்ஸ் பறவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. மெக்சிகோ நாட்டுப்புற கதைகளில் கூ என்ற பறவை வருகிறது. பூர்வீக அமெரிக்க புராணங்களில் தீப்பறவை இடம் பெற்றுள்ளது. கிரேக்க புராணங்களில் ஹார்பீஸ் என்ற பறவை சொல்லப்படுகிறது. ஆஸ்டெக் புராணங்களில் குவாட்செல்கோட் என்ற பறவை சொல்லப்படுகிறது. அமெரிக்க புராணங்களில் ராவன் ஆகிய பறவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்து புராணங்களில் அன்னம், சக்கரவாகம், அன்றில் போன்ற பறவைகள் குறிப்பிடப்படுகின்றன.

ஆடையில் புதுமை

கூகுள் மற்றும் லெவி நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் ஸ்மார்ட் ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளன. இதன் சிறப்பம்சம், தொலைபேசி அழைப்புக்களை பயன்படுத்த மற்றும் பாடல்களைக் கேட்கும் வகையில் உள்ளதுதான். இந்த ஸ்மார்ட் ஜாக்கெட்டின் கை பகுதியில் ஸ்லைடு பொருத்தபட்டிருக்கும் இதன் மூலம் ஸ்மார்ட் போனுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் பற்றிய விவரம் கிடைப்பதை நாம் உணரலாம். ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஜாக்கெட் தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் கிடைக்கப்பெறும்போது ஒரு வகையான அதிர்வினை ஆடைகளில் ஏற்படுத்தி தெரிவிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ப்ளூடூத்துடன் ஸ்மார்ட்போன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

செரபியம் காடுகள்

340 ஹெக்டேரில் பரவியுள்ள செரபியம் காடுகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ளது. நகரங்களில் இருக்கும் கழிவு நீரை, சுத்திகரித்து குழாய்கள் மூலம் இங்கு அனுப்பி மரங்களை வளர்த்துள்ளனர். இங்கு பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. கழிவு நீரில் இருக்கும் சத்துக்களும், சூரிய ஒளியும், இங்கு மரங்களை வேகமாக வளர வைக்கின்றன.

குதிரை திறன் எப்படி பெயர் வந்தது

வாகனங்களானாலும், மோட்டார் உள்ளி என்ஜின்களானாலும் அவற்றின் திறனை ஹார்ஸ் பவர் என்கிற குதிரை திறன் அலகாலேயே அளவிடுகிறோம் அல்லவா.. இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா.. குதிரைத் திறன் என்ற பிரயோகத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ்வாட். இவர் வேறு யாருமல்ல நீராவி என்ஜினைக் கண்டுபிடித்த பொறியாளர்தான். தான் உருவாக்கிய நீராவி எந்திரம் எந்த அளவுக்கு பொருள்களை இழுத்துக் கொண்டு எவ்வளவு வேகத்தில் செல்லும் என்பதை நிரூபிக்க, என்ஜினின் செயல் திறனை அளவிட வேண்டியிருந்தது. அந்தக் காலங்களில் சாரட் வண்டிகளில் குதிரைகள் பூட்டப்பட்டு இயக்கப்பட்டன. சாரட்டுக்கு மாற்றாக வந்த ஆட்டோமொபைல் வாகனங்களின் செயல்திறனை கணக்கிட குதிரையின் வேகத்தை அளவிட அவர் முடிவு செய்தார். நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரியை மேலே இழுத்து வருவதற்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. அதைக் கருத்தில் கொண்டு 149 கிலோ எடையை சுமந்து கொண்டு 100 அடி தூரத்தை ஒரு நிமிடத்தில் கடப்பதை ஒரு குதிரைத் திறன் (1 ஹெச்.பி.) என அவர் கணக்கிட்டார். பின்னர் அதவே அறிவியல் பூர்வமான கணக்கீடாக மாறி ஹெச்பி - குதிரை திறன் என்றானது.

உலகின் மிகச் சிறிய பாலூட்டி

உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி விலங்கு எது தெரியுமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. bumblebee bat என்று அழைக்கப்படும் சிறிய வவ்வால்கள்தான் அவை. இவற்றின் உடல்களின் மொத்த நீளமே 1.14 முதல் 1.29 அங்குலம் மட்டும்தான்.  அதன் இறக்கைகளின் அகலம் 5.1 முதல் 5.7 அங்குலம் மட்டுமே. இந்த வவ்வால்கள் கின்னஸிலும் இடம் பிடித்துள்ளன. தாய்லாந்திலுள்ள Khwae Noi River நதிக்கரையில் அமைந்துள்ள Kanchanaburi மாகாணத்தில் அமைந்துள்ள குகைகளில் இவ்வகை வவ்வால்கள் வாழ்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago