முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அடையாளம் காண

கத்திரிக்காயில் ஓட்டை இருந்தால் உள்ளே புழு இருக்கும். அதனால் சிறு ஓட்டை கூட இல்லாமல் கவனமாக வாங்கவேண்டும். காம்பு நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். குச்சி போன்று இருந்தால் காய் முற்றல் என்று அர்த்தம். வெள்ளை வரிகள் இருந்தால் காய் கசக்கும்.

உடனடி தேடல்

கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.

டிஜிட்டல் மாத்திரை

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகளுக்கு இன்ஜெஸ்டிபுள் சென்சார் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘டிஜிட்டல் மாத்திரைகள்’ வழங்கப்படவுள்ளன. இந்த மாத்திரை பயணிகளின் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை, பயணிகளின் தூக்கம் முறை, உடலின் வெப்பநிலை மற்றும் இதய துடிப்பு போன்ற தகவல்களை வழங்குகிறது. இதன்மூலம் பயணிகளின் உடல்நிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளமுடிகிறது.

உணவு தேவையை பூர்த்தி செய்ய செயற்கை இறைச்சி - புதிய முயற்சி

ஐஸ்லாந்து நாட்டில் உணவு தேவையை பூர்த்தி செய்ய புதிய முயற்சியாக ஆய்வகத்தில் செயற்கை இறைச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. விலங்குகள், அதற்கான தீவனங்கள், அதை உற்பத்தி செய்வதற்கான தாவரங்கள் என்ற நீண்ட சங்கிலி படிப்படியாக நெருக்கடிக்கு உள்ளாகி வரும் வேளையில் செயற்கை இறைச்சி இவற்றை வெகுவாக குறைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஓ.ஆர்.எஃப் ஜெனிட்டிக்ஸ் நிறுவனத்தின் புரதத் தொழில்நுட்பத்துறை தலைவர் அர்னா ருனாஸ்டாட்டிர் கூறுகையில், மாடுகளின் ஸ்டெம் செல்களை வைத்து ஆய்வுக்கூடங்களிலேயே பீஃப் பர்கர்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், வறுத்த இறைச்சியைத் தயாரிக்கும் நிறுவனங்களும் விரைவில் உருவாக உள்ளன.  எனவே இவை விரைவில் சந்தைக்கு வரும் என்கிறார்.ஏற்கனவே செயற்கை சிக்கனுக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல விண்வெளி செல்லும் வீரர்களுக்கு நாசா வான்கோழியின் செல்களை பயன்படுத்தி  கோழி இறைச்சியை தயார் செய்து வருவதும் கவனத்தில் கொள்ளக் கூடியதாகும்.

சர்வதேச நகரம்

தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 1986-ம் ஆண்டு நிறுவப்பட்டது  ஆரோவில் நகரம். இந்நகரம் 124 உலக நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மண் மூலம் கட்டப்பட்டது. யுனெஸ்கோ இந்நகரை ஒரு சர்வதேச நகரம் என அங்கீகரித்துள்ளது. இங்கு, 50 நாடுகளில் இருந்து பல்வேறு கலாச்சாரத்தை பின்பற்றி வந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அதிசயம் - ஆச்சர்யம்

மெல்போர்ன் நகரில் இருக்கும் ஸ்டீபன் ஹிர்ஸ்ட். மைன் கூன் வகையை சேர்ந்த ஓமர் என்ற பூனையை வளர்த்து வருகிறார். மாமிசத்தை மட்டுமே விரும்பி சாப்பிடும், ஒரு வயது நிரம்பிய இந்த பூனை 120 சென்டி மீட்டர் நீளமும், 14 கிலோ எடையும் உள்ளது.  தற்போது இந்தப் பூனை உலகின் மிக நீளமான பூனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago