முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

64 ஆண்டுகளுக்கு பின்...

உலகில் வாழும் அரிய வகை பாம்புகளில் ஒன்று தொண்டை சுருக்கு பாம்பு. இந்த அரிய வகை பாம்புகள் பிரேசில் காடுகளில் யார் கண்களுக்கு படாமல் உயிர்வாழ்ந்து வந்தது. இந்நிலையில், அரிய வகை தொண்டை சுருக்கு பாம்பு ஒன்று 64 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாம்பு ஒரு பெண் இனம். பாம்பின் நீளம் 1.7 மீட்டர். எடை 1.5 கிலோகிராம்.

மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி மருத்துவர்கள் சாதனை

நியூயார்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் மரபணு மாற்றப்பட்ட பன்றியில் வளர்க்கப்பட்ட சிறுநீரகத்தை ஒரு மனித நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தி, அதை முழுமையான ஆற்றலுடன் இயங்கக்கூடிய வகையில் இணைத்து சாதனை படைத்துள்ளனர். பன்றியின் உடலில் வளர்க்கப்பட்ட சிறுநீரகம் இப்போது மனித உடலில் சாதாரணமாக வேலை செய்வதைக் கண்டறிந்துள்ளனர். உறுப்புகளில் கோளாறு ஏற்பட்டு, நோய்வாய்ப்படும் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முயற்சிதான் உடல் உறுப்பு மாற்றம் செய்யும் முறை. இது இப்போது வேறொரு முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது, உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கையை காட்டிலும், உறுப்பு மாற்றம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பற்றாக்குறை காரணமாகப் பலரும் உயிர் இழக்கின்றனர். இதற்கான தீர்வாக மரபணு மாற்ற முறைப்படி பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட உடல் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்திப் பயன்படுத்தலாம் என்ற முயற்சி முன்வைக்கப்பட்டது. அதன்படி, மூளைச்சாவு அடைந்த ஒரு மனிதரின் குடும்பத்தின் ஒப்புதலுடன், மருத்துவர்கள் பன்றியின் சிறுநீரகத்தை நோயாளிக்கு இணைத்து, அவரை வென்டிலேட்டரில் உயிருடன் வைத்து அசாதாரணமான சோதனையை மேற்கொண்டனர். அறுவைசிகிச்சைக்குப் பின்னர் சிறுநீரக செயல்பாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணித்தபோது அது எதிர்பார்த்ததை விட இயல்பாக செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன விமானம்

தற்போது ஒரு அடுக்கும் விமானம் மட்டுமே உள்ள நிலையில், மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமான மாதிரியை ஆஸ்கர் வினல்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். இதில் 250 பேர் ஒரு நேரத்தில் பயணம் செய்ய முடியும். இந்த விமானத்தில் லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு வழக்கத்தை விட 3 மணிநேரத்துக்கு முன்னதாக செல்லலாம்.

பணியிடத்தில் தூங்கத் தயாரா? - அப்படியானால் ரூ.25 லட்சம் சம்பளம்

முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் உறங்குவதாக திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சில தூங்கி வழியும் அலுவலகங்களும் உண்டு. இதன் அர்த்தம் அதன் மந்தகதியை குறிப்பிட இப்படியும் சொல்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ அலுவலக பணியிடங்களிலேயே உறங்குபவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும்  சொல்லி குற்றமில்லை. இரவு முழுவதும் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என நாம் என்ன அருகிலிருந்தா பார்க்க முடியும்.போகட்டும். வேறு சிலருக்கோ பணி ஒவ்வாமை காரணமாக அலுவலகங்களில் தூங்கும் பிரச்னைக்கு ஆளாவார்கள். அதே பிரச்னையை கல்லூரிகளில் நம்மூர் மாணவர்களும் எதிர் கொள்வதுண்டு. படிக்கும் சப்ஜெக்ட்டுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போது கொட்டாவி ஆட்டோமேட்டிக்காக நம் வாயை பிளக்க வைத்துவிடும். துடிப்பான இளைஞர்களை கூட தூங்க வைக்கும் சக்தி நமது கல்வி நிலையங்களுக்கு உள்ளது. தூக்கம் வராதவர்களை நம்மூர் பேராசிரியர்களிடம் கொண்டு விட்டால் போதும் ஒரே நிமிடத்தில் கொர் என குறட்டை விட்டு தூங்கத் தொடங்கி விடுவர். எல்லாம் நகைச்சுவைக்காக சொல்லப்படுவதுதான்..ஆனால் அதே நேரத்தில் நீங்கள் தூங்கத் தயாரா உங்களுக்கு  இந்திய பண மதிப்பில் ரூ.25 லட்சம் சம்பளம் தயார் என ஒரு வெளிநாட்டு நிறுவனம் வித்தியாச அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த மெத்தை தயாரிக்கும் நிறுவனமான கிராஃப்டட் பெட் நிறுவனம் தான்.. வாருங்கள்.. எங்கும் போக வேண்டாம்.. எந்த வேலையும்  செய்ய வேண்டாம் என்றும்...எங்கள் மெத்தையில் படுத்து நன்றாக தூங்குகள்.. அவ்வாறு தூங்கினால் ரூ.25 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் மிரர் என்ற செய்தி தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

உலகின் முதல் ஸ்பேஸ் ஹோட்டல்

ஓரியன் ஸ்பேன் எனும்  அமெரிக்க நிறுவனம் கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலகின் முதல் சொகுசு  விண்வெளி (ஸ்பேஸ்) ஹோட்டலை அறிமுகப்படுத்தியது. இந்த சொகுசு விடுதிக்கு அரோரா நிலையம் என பெயரிடப்பட்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஹோட்டல் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் எனவும், முதல் விருந்தினர் குழு 2022 ஆம் ஆண்டு அனுப்பப்படுவார்கள் எனவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சொகுசு ஆகாய விடுதியில் ஒரே நேரத்தில் ஆறு பேர் மட்டுமே தங்க முடியும். 12 நாட்கள் இந்த விடுதியில் தங்குவதற்கு ஒருவருக்கு 9.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 71.33 கோடி முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்ன ஸ்பேஸ் ஓட்டல் போகத் தயாரா.

வெப்பத்தை தணிக்க

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பைக் குறைக்க பல்வேறு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின், புதிய முயற்சியாக கால்சைட் தூசுகளை வளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் பூமியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். கால்சைட் முறையால் வளிமண்டலத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ஓசோன் படலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கால்சைட் தூசுப்படலம் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காரணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago