முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ராபர்ட் கிளைவ் திருமணம் எங்கு நடந்தது தெரியுமா?

மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு இங்கிலாந்து அதிகாரி ஆவர். இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்சும் படைத்தலைவர் இராபர்ட் கிளைவும் இணைந்துதான் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த ராபர்ட் கிளைவ், சென்னையில்தான் திருமணம் செய்து கொண்டார். செயின் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சர்ச்சில் இருக்கும் திருமண ரிஜிஸ்டரில் ராபர்ட் கிளைவ் கையொப்பமிட்டிருக்கிறார்.  அதை ஒரு நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தானே.

பேனாவின் மூடியில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

செல்போனே கதி என்று கிடக்கும் இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு பேனா பெரிய அளவில் பழக்கத்தில் இருக்காது. பேனா மூடியை கடிக்கும் பழக்கம் உடைய நபர்களின் பாதுகாப்பு கருதி தான் இந்த துளை வைக்கப்படுகிறது. கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், உண்மைதான். பேனா மூடியை பழக்க தோஷத்தில் கடித்துக் கொண்டிருக்கும் நபர்கள், அதை ஏதேச்சையாக விழுங்கி விட்டால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. பேனா மூடியை விழுங்கி, அது மூச்சுக்குழாயை அடைத்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம், அந்த சமயத்திலும் கூட மூச்சுக்காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த துளை.

கடல்கள் அதிசயம்

கடல்கள் பூமியின் 71 சதவீத பரப்பை ஆக்கிரமித்துள்ளது மட்டுமல்லாமல், உயிர்களின் சுவாசத்திற்குத் தேவையான 70 சதவீத பிராண வாயுவையும் கடல்களே உற்பத்தி செய்கின்றன.  கடல்நீர் பசிபிக் , அட்லாண்டிக் , இந்தியப் , ஆர்டிக் , அண்டார்டிக் பெருங்கடல் என 5 வகைப்படும். பசிபிக் பெருங்கடல், உலக கடல்களில் எல்லாம் பெரியது. பூமியின் 30 சதவீத பரப்பை இது ஆக்கிரமித்துள்ளது.

கடவுளின் துகள் அல்லது போஸான் துகள்

இந்தியர் பலருக்கும், வெளிநாட்டவர் சிலருக்கும் புகழ் பெற்ற 3 போஸ்களைப் பற்றித் தெரிந்திருக்கலாம்! சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்! அடுத்து தாவரவியல் விஞ்ஞானி, ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்! 3 ஆவது உலக மேதை ஐன்ஸ்டைனுடன் பணியாற்றிய பெளதிக நிபுணர், சத்யேந்திர நாத் போஸ்! ஐன்ஸ்டீன் தெரியுமென்றால் சத்யேந்திர நாத் போஸையும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். குவாண்டம் இயற்பியல் துறைக்கு இவர் ஆற்றிய தொண்டு அத்தகையது. குவாண்டம் மெக்கானிக்ஸ் என்கிற துறையின் உட்பிரிவான குவாண்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ் இவரால் தான் உருவானது,வங்காளத்தில் படித்தார். பள்ளிகாலத்தில் இறுதி தேர்வில் 100 க்கு 110 மதிப்பெண்களை கணக்கில் இவர் பெற்றிருந்தார்; காரணம் ஒரே கணக்கை வெவ்வேறு முறைகளில் போட்டிருந்தது தான். பின் கல்லூரியில் இயற்பியலில் தங்க பதக்கம் பெற்று தேறினார்.  Max Planck's Law" மற்றும் "Light Quantum Hypothesis" பற்றிய ஒரு கட்டுரையை வெறும் ஆறு பக்கங்களில் எழுதி ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார். ஐன்ஸ்டீன் அசந்து போனார், அந்த கட்டுரையே போஸ் -ஐன்ஸ்டீன் ஸ்டாடிஸ்டிக்ஸ் எனும் துறைக்கு வழிவகுத்தது. இவரின் கட்டுரைகள் தான் ஐன்ஸ்டீன், பிளான்க் முதலியோரின் குவாண்டம் தியரி மற்றும் டிராக் ஹெய்சென்பெர்க் முதலியோரின் குவாண்டம் மெக்கனிக்ஸ் இரண்டுக்கும் பாலமாக இருந்தது.  இவரின் நினைவாகத்தான் கடவுள் துகளுக்கு போசான் என துகளுக்கு பெயரிடப்பட்டது . 

புதையல் புதிது

சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியானிங் மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய புராதனப்பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன், சீன ஹன் மன்னராட்சியின் வெண்கல காலத்தினை சேர்ந்த பானைகள், பாத்திரங்கள், இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதிசயம் - ஆச்சர்யம்

மெல்போர்ன் நகரில் இருக்கும் ஸ்டீபன் ஹிர்ஸ்ட். மைன் கூன் வகையை சேர்ந்த ஓமர் என்ற பூனையை வளர்த்து வருகிறார். மாமிசத்தை மட்டுமே விரும்பி சாப்பிடும், ஒரு வயது நிரம்பிய இந்த பூனை 120 சென்டி மீட்டர் நீளமும், 14 கிலோ எடையும் உள்ளது.  தற்போது இந்தப் பூனை உலகின் மிக நீளமான பூனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago