முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மனித தோலால் பைண்ட் செய்யப்பட்ட புத்தகம் எங்குள்ளது தெரியுமா?

காகிதங்களால் புத்தகங்கள் அச்சடிப்பதற்கு முன்பாக, ஓலை சுவடிகள், தோல், பாப்பரசி போன்ற பல்வேறு வடிவங்களில் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டன. அவற்றில் மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால் மனித தோலால் பைன்ட் செய்யப்பட்ட 3 புத்தகங்கள் ஹார்வர்டு பல்கலை கழக நூலகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 1880களின் மத்தியில் ஆர்சென் ஹவுஸே என்ற எழுத்தாளர் தனது நண்பரான டாக்டர் லுடோவிக் பவுலண்டுக்கு அளித்ததாக கூறப்படுகிறது. அந்த மருத்துவர்தான் பெண் நோயாளி ஒருவரின் உடலில் உள்ள தோலால் இந்த புத்தகத்தை பைன்ட் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த புத்தகம் இந்த நூலகத்தில் 1930களில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மூட்டை பூச்சிகளை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

இரவில் நமது தூக்கத்தை கெடுத்து கடும் எரிச்சலையும் மன உளைச்சலையும் கொடுப்பதுடன் நமது ரத்தத்தையும் பதம் பார்ப்பவை மூட்டை பூச்சிகள். இன்றை கால கட்டத்தில் நகர்ப்புறங்களில் மூட்டை பூச்சிகள் அருகிவிட்டாலும் (அதற்கு பதிலாக கொசுக்கள்) ஊரக பகுதிகளில் ஜாம் ஜாம் என்று வாழ்க்கை நடத்தியே வருகின்றன. இவை பூமி பந்தில் நெடுங்காலமாக உயிர்த்திருக்கும் ஜீவராசி என்றால் ஆச்சரியம் தானே... அதாவது மூட்டை பூச்சிகள் டினோசர்கள் வாழ்ந்த கால கட்டம் முதல் இந்த பூமியில் இருந்து வருகின்றனவாம்... அதாவது 115 மில்லியன் ஆண்டுகளாக வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பார்க்க சாதாரணமாக நமது படுக்கைகளில் காணப்படும் மூட்டை பூச்்சிகளின் வரலாறு மிகவும் சிக்கலானது என்கிறது விலங்கியல் பரிணாமவியல்... என்ன சரிதானே.

பீர் சிறந்ததாம்

வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பீர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஆல்கஹால்கள் உடல் வலியை போக்கும் தன்மை கொண்டவை. எனவே, வலி நிவாரணிகளுக்கு பதிலாக ‘2 பின்ட்’ அதாவது 16 அல்லது 20 அவுன்ஸ் அளவு பீர் குடித்தால் போதும் அதில் உள்ள ஆல்கஹால் வலி நிவாரணியாக செயல்படும். இதன் மூலம் உடல்வலி போக்கும். ஆனால் உடல் வலியை காரணம் காட்டி தொடர்ந்து ‘பீர்’ குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆல்கஹால் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.

செல்பி மோகம்

செல்பி மோகத்தால் ஏற்படும் மரணத்தில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். கடந்த ஆண்டு மட்டும் இந்தியா வில் 76 பேரும், பாகிஸ்தானில் 9 பேரும், அமெரிக்காவில் 8 பேரும், ரஷ்யாவில் 6 பேரும், பிலிப்பைன்ஸில் 4 பேரும், சீனாவில் 4 பேரும் இறந்துள்ளனர். இவர்களில் 68% பேர் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 75.5% பேர் ஆண்கள்.

ரத்தத்தை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு

ரத்தத்தில் உள்ள “ஹீமோகுளோபின்” என்ற வேதிப்பொருள் தான் அதற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. உடலுக்கு ஆக்ஸிசனை கொடுப்பதும் அதுதான். ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம். சிவப்பணுக்கள் காணப்படும். அவை உற்பத்தியாகும் இடம் இதயமல்ல; எலும்பு மஜ்ஜையில்தான் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன. சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள்.  வெள்ளை அணுக்களே நோய் எதிர்ப்புச்சக்தியின் முக்கிய ஆதாரம். ரத்த கசிவை தடுப்பவை பிளேட்லட் அணுக்கள். ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மிலி ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் மற்ற அணுக்கள் 10 சதவீதமும் இருக்கும். உடலில் ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா... ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்!  ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர்!  பைக்கின் சராசரி வேகத்தை விட சற்று அதிகம்.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..

நெருப்புடா

கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 190 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது, ஹவாய் தீவுகளில் உள்ள  கிலயூயே எரிமலை. இந்த எரிமலையில் ஹலெமா என்ற எரிமலைக் குழம்பு ஏரி மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது. இந்த எரிமலை, லாவா குழம்பைக் கக்கியபடி, பரவுவதால்தான் இதற்கு கிலயூயே என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago