முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நீண்ட சேவை

சீனா, தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு நேரடி சரக்கு ரயிலை அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் உள்ள யுவூ நகரிலிருந்து லண்டன் மாநகருக்கு இந்த சரக்கு ரயில் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.இதன்மூலம், கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய பல தேசங்களை கடந்து லண்டன் மாநகரை அந்த ரயில் அடையும். யுவூ மற்றும் லண்டன் நகரங்களுக்கு இடையிலான கிட்டத்தட்ட 12,000 கிமீ தூரத்தை 18 நாட்களில் கடக்க இருக்கிறது இந்த சரக்கு ரயில்.

புதிய முயற்சி

டிடபிள்யூடிஎம் - பிஓஎன் பைபர் தொழில்நுட்பம் (TWDM-PON fibre technology) என்ற அடுத்த தலைமுறை பைபர் இணைப்பு மூலம் விநாடிக்கு 40 ஜிபி வேகத்தில் தரவிறக்கம் மற்றும் பதிவேற்றும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளில் மிகக்குறைந்த இணைய வேகத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் சராசரி இணைய வேகம் 2.5 எம்பிபிஎஸ் (mbps) ஆகும்.

8-வது அதிசயம்

உலகின் 8-வது இயற்கை அதிசயம் நியூசிலாந்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது. நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை உள்ளது. இதன் செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி  சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உண்டாகியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து உள்ளது. இச் செயற்பாடு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது ஆகும். இதனால் உலகின் 8-வது இயற்கை அதிசயமாக கருதப்படுகின்றது. ஆனால் இப் பகுதியை நியூசிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவில்லை. எவ்வாறெனினும் விரைவில் கண்கவர் அமைப்பில் உள்ள இவ்விடத்தினை உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியர்களின் திறமை

நிக்கும்பா வம்சத்தை சேர்ந்த சாந்த் மகாராஜாவால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாந்த் பாவ்ரி படிக்கிணறு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. இந்தியர்களின் கணிதவியல் வல்லமைக்கும், கட்டிடக்கலை நேர்த்திக்கும் இது சிறந்த சான்றாகும். பாலைவன பிரதேசமான இங்கு தண்ணீரை சேமிக்கும் பொருட்டு இந்த படிக்கிணறு கட்டப்பட்டிருக்கிறது. இது 100 அடி ஆழமும், 13 தளங்களும் கொண்டு வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. இந்த கிணற்றில் இருக்கும் தண்ணீர் எப்போதுமே குளிர்ச்சியுடன் இருப்பது அதிசயம். இந்த படிக்கிணற்றில் மொத்தம் 3500 படிகள் இருக்கின்றன. பதிமூன்று அடுக்குகளாக அமைந்திருக்கும் இந்த படிகள் ஒவ்வொன்றும் அச்சுப்பிசகாமல் ஒரே போல அமைக்கப்பட்டிருப்பது நமக்கு பிரம்மிப்பை உண்டுபண்ணும்.

சிறிய சாதனம்

‘ராஸ்பெர்ரி பை’ என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணினி ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டு, நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ‘ராஸ்பெர்ரி ஷேக் 4டி’  என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். நிலநடுக்கத்தின்போது உருவாகும் கண்ணுக்குத் தெரியாத அசைவுகளைப் பார்ப்பதற்கும் இது உதவுகிறது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதை முன்பே நாம் கணிக்க முடியுமாம்.

தரையிலும் தண்டவாளத்திலும் ஓடும் பேருந்து முதன்முறையாக அறிமுகம்

ஜப்பான் நாட்டில் முதன் முறையாக தரையிலும் தண்டவாளத்திலும் ஓடும் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதற்காக பிரத்யேக வடிவில் வாகனங்களை வடிவமைத்துள்ளது. இந்த ரயில் பஸ் பேருந்து சேவை கடந்த மாதம் ஜப்பானில் உள்ள கையோ நகரில் தொடங்கப்பட்டது. சாலையில் ஓடும் போது ரப்பர் டயரிலும், தண்டவாளத்தில் ஓடும் போது இரும்பு சக்கரத்திலும் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு சக்கரங்களின் செயல்பாடுகளையும் 15 விநாடிகளுக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago