முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

176 ஏக்கரில் அலுவலகம்

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் கனவு திட்டமான ஸ்பேஸ்ஷிப் கேம்பஸ் 2, கலிஃபோர்னியாவில் சுமார் 2.8 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளது. இதன் ஒட்டு மொத்த கட்டுமான செலவு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இங்கு 176 ஏக்கர் பரப்பளவில் கண்ணாடிகளால் ஆன பெரிய சுவர்கள் கட்டமைக்கப் பட்டுள்ளன. பெரிய அலுவலகங்களில் ஒன்றாகவும் கருதப்படும் இந்த வளாகத்தில் 14,200 ஊழியர்கள் பணிபுரிய முடியும். இதன் தூரம் மட்டும் ஒரு மைலுக்கும் அதிகமாம். இந்த வளாகத்தின் முதன்மை கட்டிடத்தின் உள்கட்டமைப்புகளுக்கு மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. 300,000 சதுர அடியில் இரு பெரிய கட்டிடங்கள் இந்த வளாகத்தினுள் ஆய்வு மற்றும் தயாரிப்பு பணிகளுக்காக கட்டமைக்கப்படுகிறது. 

இறைச்சியுண்ணும் தாவரம்

பொதுவாக தாவரங்களைத்தான் விலங்குகளும், பூச்சிகளும், புழுக்களும் சாப்பிடும். ஆனால் புழு, பூச்சிகளை சாப்பிடும் தாவரங்களும் இருக்கின்றன என்பது ஆச்சரியம் தானே.. ஆனால் உண்மைதான். Carnivorous plant என்ற தாவரம் ஊனுண்ணி வகையைச் சேர்ந்தது. அதான் விலங்குகளை விரும்பி உண்ணக் கூடியது. இவை பெரும்பாலும் பூச்சிகளையும், ஊர்வனவற்றையுமே குறி வைக்கின்றன. இதற்காகவே இவை சிறப்பான வடிவமைப்பை பெற்றுள்ளன. இதன் இலைகள் அருகில் வரும் பூச்சிகளை அப்படியே லபக் கென்று கவ்வி பிடித்து மூடிக் கொள்கின்றன. அதன் பின்னர் அதில் சுரக்கும் ஒரு வகை திரவம் அப்படியே பூச்சிகளை தின்று செரிக்க உதவுகின்றன. பெரும்பாலும் மண்ணில் நைட்ரசன் சத்து குறைவாக உள்ள சதுப்பு நிலங்களிலேயே இவை அதிகம் காணப்படுகின்றன. ஆகவே பூச்சிகளை விழுங்கி அதன் உடலில் உள்ள புரதத்தில் கலந்திருக்கும் நைட்ரசனை உறிஞ்சி விடுகின்றன.. நம்மூர்களில் இல்லை எனவே நாம் பயப்படத் தேவையில்லை..

இதயத்திற்கு நல்லது

முந்திரியில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்வதால் இதயத்திற்கு நல்லது. ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இது தடுக்கிறது. இதில் மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன.

கோல்டன் பிஷ்

லிவர்பூல், ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தங்க மீன்கள் மற்றும் க்ருஷியன் கார்ப் என்ற மீன்களின் 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் 50 மில்லி கிராம் அளவுக்கு ஆல்கஹாலை உற்பத்தி செய்வதைக் கண்டறிந்துள்ளனர். பொதுவாக மீன்கள் நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை சுவாசித்து உயிர் வாழ்கின்றன. ஆக்ஸிஜன் இல்லையென்றால் இறந்துவிடும். ஆனால் ஆக்ஸிஜன் இல்லாத சூழலிலும் மீன்கள் உயிர் வாழும் திறன் உடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே அவை ஆல்கஹாலை உற்பத்தி செய்கின்றனவாம். தங்கமீன்கள் குளிர்காலங்களில் உறைந்த ஏரிகளுக்கு கீழே இருக்கும்போது அந்த சூழலை எதிர்கொள்ள ஆல்கஹாலை உற்பத்தி செய்கின்றன.

புதுமையான வழியில்...

மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை  கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.

விரைவில் வருகிறது

பிஎம்டபிள்யூவின் எவர்க்ரீன் மாடலான பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் (BMW R 1200 GS) பைக்குகளை பறக்கும் வகையில் வடிவமைப்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பறக்கும் மோட்டார் சைக்கிள்களின் மினியேச்சர் மாடல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago