முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வலை போட்டு மீன் பிடித்த தேசிய கவி யார் தெரியுமா?

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு பரவலாக பேசப்பட்ட ஒரு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆவர். நம் நாட்டின் தேசிய கீதமான “ஜன கண மன” பாடலை எழுதிய ஒரு அற்புத கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இவர் கவிதை இயற்றுவதில் மட்டுமல்ல இசைப் பாடகர், கதாசிரியர், நாவலாசிரியர், ஓவியர், கல்வியாளர் போன்ற பல துறைகளிலும் கால்தடம் பதித்த அற்புத மாமனிதர் ஆவார். கவிதைக்காக நோபல் பரிசு வாங்கிய ரவீந்திரநாத் தாகூருக்கு சிறு வலைபோட்டு லாவகமாக மீன் பிடிக்கும் ஆற்றல் உண்டு. வடிகட்டி மாதிரி உள்ள சின்னஞ் சிறிய வலையில் பரபரப்பான கொல்கத்தா நகரத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைதியாக ஓடும் ‘விளிண்டா’ ஆற்றங்கரையில் அவர் அடிக்கடி மீன் பிடிக்கச்செல்வது வழக்கம்.   பிடித்த மீனை சிறிதுநேரம் உள்ளங்கையில் வைத்திருந்துவிட்டு பிறகு ஆற்றில் விடுவாராம்.

வயர்லெஸ் சார்ஜர்

வயர்லெஸ் சார்ஜ் செய்ய புதுவகையான ஸ்டிக்கர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் பேட் மற்றும் ஸ்டிக்கரில் உள்ள இரு மெட்டல் எலக்ரோட்ஸ் பட்டன்களை போனின் யுஎஸ்பி போர்ட்டில் பொருத்தினால் சார்ஜ் ஏறிவிடும். இந்த ஸ்டிக்கர் சார்ஜர் மின்கடத்தல் முறையில் செயல்படுகிறது. இதன் விலை ரூ.6044.

நீதிமன்றம் வைத்திருக்கும் பறவை

காகங்கள் உலகில் உள்ள மிகவும் புத்திசாலித்தனமான பறவைகள். கருவிகளைப் பயன்படுத்தக்கூடியதும் கருவிகளை உருவாக்கக்கூடியதுமான ஒரே பறவை காகம்தான். ஒரு காகம் தனிப்பட்ட மனித முகங்களை அடையாளம் கண்டு நினைவில் வைத்திருக்கும் திறன் கொண்டது. ஆபத்து பற்றிய தகவல்களை மற்ற காகங்களுடன் அவைகள் தங்கள் மொழியில் பகிர்ந்து கொள்ளும். காகங்கள் தங்கள் பிரச்சனைகளை பேசி தீர்க்க நீதிமன்றம் போன்ற செயல்பாட்டில் ஈடுபடுகின்றன. அங்கு அவைகள் இளவயது காகங்கள் உணவை திருடுவது போன்று செய்யும் எந்த குற்றத்தையும் செய்த காகத்தை தண்டிக்கிறது. இது காகங்களிடம் காணப்படும் வித்தியாசமான செயல் என சொல்லப்படுகிறது. ஒரு வேலையை வெற்றியாக செய்து முடித்த பிறகு மனிதர்கள் உணரும் சாதனை உணர்வைப் போலவே ஒரு கருவியை வெற்றிகரமாகப் பயன்படுத்திய பிறகு காகங்களும் அதிக நம்பிக்கையுடன் நடந்து கொள்கின்றனவாம். மனிதர்களைப் போலவே காகங்களும் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதில் மகிழ்ச்சி அடைவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

சிந்திய காபியில் சித்திரம் தீட்டி அசத்தும் இத்தாலிய இளைஞர்

எதையும் கலைக் கண்ணோடு அணுகி அதையும் தனது தனித்தன்மையாக மாற்றிக் கொள்ளக் கூடிய வல்லவர்களும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒருவர்தான் இத்தாலியில் உள்ள Mantua என்ற இடத்தைச் சேர்ந்தவரான Giulia Bernardelli என்ற 34 வயது இளைஞர். ஓவிய நுண்கலைப் பிரிவில் பட்டதாரியான இவருக்கு, அழகிய சித்திரங்களை தீட்ட மற்றவர்களை போல வண்ண வண்ண நீர் வண்ணங்களோ, பெயிண்டோ, பேஸ்டலோ, பிரஷ்ஷோ தேவையில்லை, ஜஸ்ட் தரையில் சிந்திய காபியும் ஸ்பூனும் இருந்தால் போதும்.. அசத்தலான ஓவியங்களை தீட்டி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறார். இவரது காபி ஓவியங்களை ஆர்வலர்கள் உலகம் முழுதும் கொண்டாடி பரப்பி வருகின்றனர். கண்ணை கவரும் வகையில் இவர் வரைந்துள்ள ரயில் நிலையம், யானை, மிகப் பெரிய கோட்டை, அழகிய மனித முகங்கள் ஆகியன காண்பவரை கவர்ந்திழுக்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றன. ஓவியம் வரைவது ஓரு கலை என்றால் சிந்திய காபியில் சிதறாமல் அதை சித்திரமாக்குவது புதுக்கலை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

சங்கடத்தில் பேஸ்புக்

சட்டத்திற்கு எதிராக மற்றொரு நிறுவனத்தின் விஆர் (விர்சுவல் ரியாலிட்டி)எனப்படும் மெய் நிகர் தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 50 கோடி டாலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்கைப் இயங்காது

ஐஎம்ஓ, வாட்ஸ்அப் வீடியோ கால், பேஸ்புக் வீடியோ கால் என பல வீடியோ சாட்டிங் வசதிகள் வந்த போதிலும் முதன் முதலாக புகழ்பெற்றது ஸ்கைப் தான். குரூப் காலிங், மெசெஜ் சாட்டிங் என பல அம்சங்கள் கொண்ட ஸ்கைப், அதன் வெர்ஷனை மார்ச் மாதம் முதல் மேம்பட்ட பதிப்பில் வழங்க உள்ளதால் பழைய வெர்ஷன் இயங்காது என மைரோ சாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago