முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகம் மதுரைகாமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி:-காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகம் மதுரைகாமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளது.  இதன் மூலம் இரு பல்கலைக்கழகங்களுக்கிடையே தனிப்பட்ட திட்டங்களில் ஒத்துழைப்பு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துதல், ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் பரிமாற்றம், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு விரிவுரைகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை வழங்குதல், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்புஃகுறுகியகாலஃமேம்பட்ட பயிற்சிக்கு வாய்ப்புகளை வழங்குதல், நூலகம்ஃஅதிநவீனகருவிகள்ஃபிறவசதிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குதல், விரிவுரைகள், கருத்தரங்குகள், சர்வதேச கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் பட்டறைகள் நடத்துதல், தேசியஃசர்வதேச இதழ்களில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் தாள்களை வெளியிடுவதற்கான வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் எதிர்காலத்தில் புதிய திட்டங்களுக்கு ஒத்துழைக்க வாய்ப்புகளை தேடுதல் ஆகும். அழகப்பாபல்கலைக்கழக வேதியியல் மற்றும் உயிரி தொழில் நுட்பத்துறைகள் ஆகிய இரண்டும் மதுரைகாமராசர் பல்கலைக்கழக வேதியியல் மற்றும் உயரிதொழில் நுட்பத் துறைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
 பொதுவாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகும். நமது மாநிலத்திலேயே நன்றாக செயல்பட்டு வருகின்ற பலமாநில பல்கலைக்கழகங்களில் சிலதுறைகள் சிறப்பு மற்றும் நற்பெயர் பெற்று நம்நாட்டில் மட்டுமன்றி, உலக அளவிலும் சிறந்து விளங்குகின்றன.  அந்தவகையில், அழகப்பாபல்கலைக்கழகம், பேராசிரிய பெருமக்களும், ஆராய்ச்சி மாணவர்களும் பயன்பெறும் வகையில், அருகிலுள்ள மதுரைகாமராசர் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், அழகப்பாபல்கலைக்கழகத்தில் ரூ.20 கோடிமதிப்பிலான அறிவியல் ஆய்வு உபகரணங்கள் ஒரே இடத்தில் சேகரிக்கப்பட்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உள்ளது. விரைவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுடனும்  அழகப்பாபல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது. 
 அதனைத் தொடர்ந்து மதுரைகாமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. பி.பி. செல்லதுரை அவர்கள் பேசியதாவது:
 உயர்கல்வியை சிகரத்திற்கு எடுத்துச் செல்கிற முயற்சியே இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதன் முக்கிய நோக்கமாகும்.  இரண்டு பல்கலைக்கழகங்களிலும் உள்ளமேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பவசதிகள், அறிவியல் ஆய்வு உபகரண வசதிகள், பேராசிரியர்களின் நிபுணத்துவம் ஆகியவற்றை பகிர்ந்துக் கொள்ள இது வழிவகுக்கும்.  சமுதாயத்தின் ஒட்டு மொத்தபயன்பாட்டிற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும். நமது பல்கலைக்கழக ஆசிரியர்கள் மாணவர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் அறிவுபரிமாற்றம் ஏற்படும் எனத் தெரிவித்தார். ஏற்கனவே மதுரைகாமராசர் பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகத்துடன் 1.12.2017 அன்று கல்வியியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் பேரா. எஸ்.எம். ராமசாமி, பேரா. பி. சுபா~; சந்திரபோஸ், முனைவர் எ. நூராயண மூர்த்தி, முனைவர் ஜெ. ஜெயகாந்தன் மற்றும் முனைவர் கே. குருநாதன் ஆகியோர் இந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து