Idhayam Matrimony

ஒரே நாளில் இரண்டு முறை குறைந்தது தங்கத்தின் விலை: சவரன் ரூ. 99,840-க்கு விற்பனை

புதன்கிழமை, 31 டிசம்பர் 2025      வர்த்தகம்
Gold 2025-02-20

சென்னை, ஒரே நாளில் நேற்று தங்கம் சவரனுக்கு ரூ. 960 ரூபாய் குறைந்தது, ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது.

தங்கம், வெள்ளி விலை கடந்த ஒரு மாதமாக 'கிடுகிடு'வென உயர்ந்து வந்தது. தினமும் புதிய உச்சத்தை கடந்த வண்ணமே விலை பயணம் ஆனது. தங்கத்தை பொறுத்தவரையில், கடந்த 28-ம் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கு விற்பனை ஆனது புதிய உச்சமாக பார்க்கப்பட்டது. கொஞ்சமாவது விலை குறையாதா? என பார்த்து கொண்டிருந்த நேரத்தில் நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக சரிந்து இல்லத்தரசிகள், மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.420-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று காலை குறைந்தது சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை குறைந்தது. ஒரு சவரனுக்கு ரூ. 560 குறைந்தது. இதனால் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 960 ரூபாய் குறைந்தது, தற்போது ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.23-ம், கிலோவுக்கு ரூ.23 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.258-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்றும்  வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.258-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

கடைசி 5 நாட்ள்  தங்கம் விலை:-

1) 31-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,840.

2) 30-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800.

3) 29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160.

4) 28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800.

5) 27-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து