மனுக்கள் பெற்று கொண்டு உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றுவதுதான் எங்களது முதல் கடமை : அமைச்சர் பேச்சு

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      சிவகங்கை
vebbangulam photo- 16

சிவகங்கை-  சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குளம் ஊராட்சியில்   மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத்,  முன்னிலை வகித்தார்.  கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  .ஜி.பாஸ்கரன்   தலைமை வகித்தார். இம்முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை தொடர்பான மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் ஆய்வு செய்ததுடன் தொடர்புடைய அலுவலர்கள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென   அமைச்சர்  அறிவுறுத்தினார்.
          மேலும் இச்சிறப்பு முகாமில் வேப்பங்குளம், குருந்தம்பட்டு, ஆலம்பட்;டு, கீழப்பூங்குடி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இன்று பெறப்பட்ட மனுக்களில் சாலை வசதி, குடிநீர் வழங்குவதற்கு தேவையான பணிகள் நிறைவேற்றித் தர வேண்டியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், முதியோர் உதவித் தொகை மற்றும் தெருவிளக்கு அமைத்தல், பட்டா மாறுதல், பசுமை வீடு வேண்டுதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 260 மனுக்கள் பெறப்பட்டதுடன் அது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதுடன்   அமைச்சர்  பேசுகையில்,
           மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியுடன் ஆட்சி புரியும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும்  தமிழ்நாடு துணை முதலமைச்சர்   நல்வழிகாட்டுதலுடன் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அதனடிப்படையில் அரசின் திட்டங்கள் கிராமப் பகுதிகளிலுள்ள கடைக்கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமப் பகுதிக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்த திட்;டமிட்டு மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஊராட்சியாக சென்று பொதுமக்களிடம் கோரிக்கை தொடர்பான மனுக்கள் பெற்று உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த வாரம் மக்களிடம் மனுக்கள் பெற்று தற்பொழுது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தொடர்ந்து இன்று வேப்பங்குளம் ஊராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுவது மட்டுமன்றி உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றுவதே எங்களது முதல் கடமையாகும். அந்த வகையில் தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கல்லல் பெரியகோவில் தெப்பக்குளம் சீர் செய்யப்படும். அதேபோல் கல்லல் ஊராட்சியைச் சுற்றி பல்வேறு கிராமங்கள் இருப்பதால் பொதுமக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு கல்லலில் விரைவில் புதிய பேருந்து நிலையம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
          பொதுவாக குறை தீர்க்கும் முகாமின் நோக்கம் அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதேயாகும். எனவே  கட்சிப்பாகுபாடின்றி எந்த நேரம் வேண்டுமானலும் பொதுமக்கள் என்னை சந்தித்தோ அல்லது தொலைபேசி மூலம் தெரிவித்தாலும் தாங்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கேற்ப பொதுமக்களும் தங்கள் பகுதியில் நடைபெறும் இதுபோன்ற சிறப்பு முகாமில் பங்கேற்று தங்களுக்குரிய தேவைகள் மற்றும் ஊரின் வளர்ச்சி குறித்த கோரிக்கைகளை தெரிவித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என   கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  ஜி.பாஸ்கரன்   தெரிவித்தார்.
         இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் பர்னாபாஸ், முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் ஜெயகுணசீலன், முன்னாள் கல்லல் ஒன்றியக் குழுத்தலைவர் அசோகன், முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவர் சசிக்குமார்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து