முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்டோபர் மாதம் 9-ம் தேதி விஷால்-அனிஷா திருமணம்

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      சினிமா
Image Unavailable

சென்னை, நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் நடிப்பில் உருவான அயோக்யா நேற்று ரிலீசாக இருந்தது. சில பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

முதன்முறையாக ஒரு ரீமேக் படத்தில் நடித்துள்ளேன். படங்களை ரீமேக் செய்யும்போது அந்தந்த மொழியின் மார்க்கெட்டில் சிக்கல் ஏற்படும். இதனாலேயே நான் ரீமேக் செய்வதை தவிர்த்து விடுவேன். ஆனால் அயோக்யா படத்தின் கதை என்னை பாதித்ததால் ரீமேக் செய்துள்ளேன். பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்பதை படம் பேசுகிறது. இப்போது இருக்கும் தண்டனைகள் போதாது என்பது என் கருத்து என்றார்.

அனிஷாவுடனான திருமணம் எப்போது?என்ற கேள்விக்கு, அக்டோபர் 9-ந் தேதி திருமணம், இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார். மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் துப்பறிவாளன் 2 உறுதியாகிவிட்டதா? என்ற கேள்விக்கு ஆமாம். ஆகஸ்டு 15-ந் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம் என கூறினார்.மேலும் அவர் கூறும்போது, தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் அரசு காட்டும் அக்கறையையும் ஆர்வத்தையும் பைரசி வி‌ஷயத்திலும் காட்டும் என நம்புகிறேன். காரணம் பைரசி தான் தமிழ் சினிமாவை அழித்துக்கொண்டு இருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து