மோடியுடன் இணைந்து பணியாற்றத் தயார்: வாழ்த்து செய்தியில் கனடா பிரதமர் உறுதி

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      உலகம்
Canada PM Justin 2019 05 24

ஒட்டாவா, மீண்டும் பிரதமரான மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் டுரூட்டோ வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். இதையடுத்து பல்வேறு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டீன் டுரூட்டோ, பிரதமர் மோடிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டீன் கூறுகையில், மீண்டும் வெற்றி பெற்று இந்தியாவில் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா அரசின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கனடா வாழ் இந்தியர்களின் வாழ்க்கை மேம்பாடு, கல்வி, வர்த்தகம், முதலீடு, வாழ்க்கை சூழலியல் மாற்றம் போன்ற துறைகளில் மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து