இந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019      விளையாட்டு
IND-SA match cancel rain 2019 09 15

தரம்சாலா : தரம்சாலாவில் நடைபெற இருந்த இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கனமழையால் கைவிடப்பட்டது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தரம்சாலாவில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதற்கான டாஸ் சரியாக 6.30 மணிக்கு சுண்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், தரம்சாலாவில் மழை பெய்து வந்ததால் டாஸ் சுண்டப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நடுவர்கள் போட்டி கைவிடப்படுவதாக தெரிவித்தனர். போட்டி கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து