சர்வதேச வாள்வீச்சு - தமிழக வீராங்கனை பவானிதேவிக்கு வெள்ளி

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2019      விளையாட்டு
bhavani devi silver 2019 09 30

சென்னை : பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனை சி.ஏ.பவானி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

பெல்ஜியம் நாட்டில் உள்ள கெண்ட் நகரில் டர்னாய் சேட்லைட் வாள்வீச்சு போட்டி (சர்வதேச அளவிலான பந்தயம்) நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக வீராங்கனை சி.ஏ.பவானி தேவி வெள்ளிப்பதக்கம் பெற்றார். தனிநபர் சேபர் இறுதிப்போட்டியில் அவர் அஜர் பெய்ஜான் நாட்டைச் சேர்நத அன்னா பாஸ்டாவுடன் 10-15 என்ற கணக்கில் தோற்று 2-வது இடத்தை பிடித்தார். தற்போது பவானிதேவி உலக தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ளார். பவானிதேவி கூறும் போது, “ஒலிம்பிக்குக்கு தகுதி பெற இந்த போட்டி ஊக்கம் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் பல போட்டியிலும் கலந்து கொள்வேன்” என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து