முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் - தலைமைத்தேர்தல் அதிகாரி சாகு தகவல்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று ( 20-ம் தேதி) வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்களை அந்தந்த வாக்குசாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதனை தொடர்ந்து தேர்தல் இயந்திரங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்புபரிசோதித்து காண்பிக்கப்படும். மேலும் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.  அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும் தேர்தல் பார்வையாளர்கள் இன்று ( நேற்று) முதல் பணியில் ஈடுபடுவார்கள். இதுவரை நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், நகை மதுபானங்கள் கைப்பற்ப்பட்டுள்ளது. இதுவரை அங்கு போடப்பட்ட வழக்குகள் மற்றும் புகார்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட 2.87 லட்சம் விவகாரத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமாருக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம். சீமான் சர்ச்சை பேச்சு குறித்தான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வழங்குவார். இதனை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவுள்ளோம். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும்பணியில் தமிழகம் முழுவதும் 47. 83 சதவீத வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்துள்ளனர். இதில் அதிகப்படியாக பெரம்பலூர் மாவட்டம் 98.71 சதவீத மக்கள் தங்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்களை சரிபார்த்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து