ராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதல்- 10 பேர் பலி

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      இந்தியா
rajasthan bus coalition 2019 11 18

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதி தீ பிடித்ததில் 10 பேர் பலியானார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டம், ஸ்ரீ தங்கர்கர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி, பேருந்தின் மீது மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் பஸ்சிற்குள் பயணிகள் சிக்கி கொண்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். சுமார் 25 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய வாகனங்கள் சாலையில் கவிழ்ந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து