முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார்டு மறுவரையறைப் பணிகள் முடிந்து விட்டன: சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் - வழக்கு விசாரணை இன்று நடக்கிறது

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : உள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு டிசம்பர் 2-ல் வெளியிடப்பட்டுள்ளது என்றும், வார்டு மறுவரையறைப் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் பிராமணப்பத்திரத்தில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடுத்த விசாரணை வருவதற்குள் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வழக்கை டிச.13-ம் தேதிக்கு ஒத்திவைத்து, தேர்தல் அறிவிப்புகள் வெளியிட்டதற்கான அறிவிப்பாணையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை 6-ம் தேதி தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய இறுதி நாள் வரும் 13-ம் தேதியாகும். வாக்கு எண்ணிகை ஜனவரி 2-ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், நிர்வாக காரணங்களுக்காக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்படவில்லை என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்திருந்தார். அதே போல, புதிததாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பழைய மாற்று வரையறையின்படியே தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு படி தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டதற்கான விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் பிரமணப் பத்திரமாக நேற்று தாக்கல் செய்துள்ளது. இந்த பிராமண பாத்திரம் தாக்கல் தொடர்பாக விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து