முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது : பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 6 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

பா.ஜ.க.வின் 40 - வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரசுக்கு எதிராக நீண்ட போருக்கு தயாராகிவிட்டதாக கூறியுள்ளார்.

பா.ஜ.க.வின் 40 - வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

கொரோனாவுக்கு எதிராக இந்தியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் வழங்கும் ஆதரவும் பாராட்டும் வகையில் உள்ளது. மக்கள் ஊரடங்காக இருந்தாலும் சரி, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் உறுதியாக நிற்கிறோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் 130 கோடி மக்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த நாட்டு மக்கள் இத்தகைய ஒழுக்கத்தைக் வெளிப்படுத்துவார்கள் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) இரவு நாட்டு மக்கள் காட்டிய ஒற்றுமை உணர்வை பார்த்தோம்.

விளக்குகள் ஏற்றப்பட்டன

கொரோனா வைரசின் இருளை எதிர்த்துப் போராட கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை எண்ணற்ற விளக்குகள் ஏற்றப்பட்டன. 130 கோடி இந்தியர்கள் மேற்கொண்ட இந்த பெரிய நடவடிக்கைகள், எங்களை நீண்ட போருக்கு தயார்படுத்தியுள்ளன. கொரோனாவுக்கு எதிராக இது நீண்ட போராக இருக்கும். அதற்காக நாம் சோர்ந்துபோய்விடக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் கேட்டுக்கொண்டபடி நாடு முழுவதும் மக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தங்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்குகளை ஏற்றினார்கள். இன்னும் சிலர் மெழுகுவர்த்திகளை ஏற்றினார்கள். பல இளைஞர்கள் பட்டாசு வெடித்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தினார்கள். மொத்தத்தில் இந்திய மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து