முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் குறித்த சர்ச்சை கருத்து: பின்வாங்கினார் நேபாள பிரதமர் சர்மா ஒலி

புதன்கிழமை, 15 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

காத்மாண்டு : கடவுள் ராமர் குறித்த சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பை தொடர்ந்து பின்வாங்கினார் நேபாள பிரதமர் சர்மா ஒலி

அண்மைக் காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நேபாளம்  லிபுலேக் கணவாய் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்ட வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்தது. தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார் . தற்போது புதிய சர்ச்சை  கருத்தை வெளியிட்டு உள்ளார். 

தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராமர் வசித்த அயோத்தி என்பது இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் அல்ல என்றும், நேபாளத்தின் பிர்குஞ்ச் மாவட்டத்தில் உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம் ஆகும்.(காத்மாண்டுவில் இருந்து 135 கீமீ தூரத்தில் உள்ளது) நாங்கள் கலாச்சார ரீதியாக சற்று ஒடுக்கப்பட்டிருக்கிறோம்.

உண்மைகள் அத்துமீறப்பட்டுள்ளன எனகூறினார். நேபாள பிரதமரின் கருத்தை அடிப்படையற்ற , வரலாற்று ஆதாரம் இல்லாத வெறும் பேச்சு என்று இந்திய அரசும் அக்கருத்தை நிராகரித்தது. சர்மா ஒலி கூறிய கருத்துக்கு இந்து மதத் தலைவர்களும் அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து அவசரமாக நேபாள அரசு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. சர்மா ஒலியின் கருத்துகள் மத நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கத்துடன் கூறப்படவில்லை என்றும் அயோத்தியின் சிறப்பையும் பண்பாட்டு ரீதியாக அதற்கு உள்ள பெருமையையும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் நேபாள அரசு தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து