கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திங்கட்கிழமை, 27 ஜூலை 2020      தமிழகம்
Surendran 2020 07 27

Source: provided

சென்னை : கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், இந்து தமிழர் பேரவையின் கோபால் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூ.டியூப் சேனலில் வீடியோ வெளியிடப்பட்டது இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கறுப்பர் கூட்டம் சேனல் நிர்வாகிகளான செந்தில் வாசன், சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர்  தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் உத்தரவின்பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

இதே போல் நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக விமர்சித்த இந்து தமிழர் பேரவையின் கோபால் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.  குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கு ஜாமீன் பெற முடியாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து