தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      தமிழகம்
TN-assembly 2020 09 16-1

Source: provided

சென்னை : மூன்று நாள் கூட்டம் முடிவடைந்த நிலையில் தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்று நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது.  தமிழக சட்டசபை கூட்டத்தொடர் மார்ச் மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியது. அதனால் தொடர் பாதிலேயே முடிக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த கூட்டத்தொடரை ஆறு மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்பதால், தற்போது மழைக்கால கூட்டத் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது.  கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதால் சட்டசபை கூட்டத்தை காலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும், மூன்று நாட்கள்தான் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.  அதன்படி கடந்த திங்கட்கிழமை சட்டசபை கூட்டம் தொடங்கியது. நேற்றுடன் மூன்று நாட்கள் முடிவடைந்ததை தொடர்ந்து, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து