முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹாரம்

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கொரோன தடுப்பு நடவடிக்கை காரணமாக சில கட்டுபாடுகளுடன் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் காலை மற்றும் மாலையில் யாக சாலை பூஜைகள் நடந்தன.

விழா நாட்களில் தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் மஞ்சள் பொடி, மா பொடி, இளநீர், தேன், பால் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. 

கந்தசஷ்டி திருவிழாவின் 6-ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார். தீபாராதனைக்கு பின்னர் சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

பின்னர் அலங்காரமாகி சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதின கந்தசஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார். ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீவரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படை வீரர்களுடன் சன்னதி தெரு வழியாக மாலை --- மணிக்கு கோவில் கடற்கரை முகப்பிற்கு வந்து சேர்ந்தார். மாலை --- மணிக்கு, சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபத்மனை வதம் செய்ய புறப்பட்டார். 

முதலில் யானைமுகன் தனது பரிவாரங்களுடன், முருக பெருமானை நோக்கி போர் புரிய சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே வந்து நின்றான். மாலை --- மணிக்கு தாரகாசூரனை, முருகபெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். அதன் பிறகு சிங்கமுகாசூரன், அதேபோல் முருகனை வலம், இடமாக சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருக பெருமான் தன் வேலால் வதம் செய்தார். தொடர்ந்து சூரபத்மன் தனது படை வீரர்களுடன் வேகமாக முருக பெருமானுடன் போர் புரிய வந்தான். முருகப்பெருமான் வேல் எடுத்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார்.

அப்போது வானத்தில் கருடன் சுற்றி வட்டமிட்டது. இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார். 

பின்னர் முருகனுக்கும், வள்ளி-தெய்வானை அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதிக்கு சென்றார். அங்கு இருந்த கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம் நடந்தது.

இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி எளிமையான முறையில் கடற்கரை முகப்பு பகுதியில் நடந்தது. பக்தர்களை அனுமதிக்கவில்லை. பக்தர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து சூரசம்கார நிகழ்ச்சியை காண டிவி, யூடிப் போன்றவற்றில் நேரடியாக ஒளிபரப்பபட்டது. 

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 2 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா வட்டாட்சியர் மண்டல துணை தாசில்தார் பாலா தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன் கலந்து கொண்டனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர்(பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து