முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஹாக்கி தொடர் நடத்த வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கராச்சி : மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஹாக்கி தொடர் நடத்த வேண்டுகோள் விடுக்கப்படும் என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஹாக்கி சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் அடுத்த மாதம் (மே) 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘டெல்லியில் நடைபெறும் சர்வதேச ஹாக்கி சம்மேளன கூட்டத்தில் நாங்கள் பங்கேற்பதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே மீண்டும் ஹாக்கி தொடர் நடத்துவது குறித்து இந்திய ஹாக்கி சம்மேளன நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். 

இரு நாடுகள் இடையிலான தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு கூட நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடர் நடந்தால் இரு நாட்டு சம்மேளனங்களுக்கும் நல்ல வருவாய் கிடைப்பதுடன், ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக இருக்கும்’ என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து