Idhayam Matrimony

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.864 உயர்வு

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2022      வர்த்தகம்
Image Unavailable

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.864 உயர்ந்தது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக நகை வியாபாரி ஒருவர் தெரிவித்தார். தங்கம் விலை மேலும் அதிகரிப்பதற்கான சூழ்நிலையும் உருவாகி உள்ளது.

சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. ஒருநாள் விலை ஏறுவதும், மறுநாள் விலை குறைவதுமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.864 உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராம் ரூ. 4,719 ஆக இருந்தது. நேற்று இது ரூ.4,827 ஆக உயர்ந்துள்ளது. பவுன் ரூ.37,752-ல் இருந்து ரூ.38, 816 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு ரூ.108-ம், பவுனுக்கு ரூ.864-ம் அதிகரித்து உள்ளது. கடந்த 15-ந் தேதி பவுன் ரூ.37,568 ஆக இருந்தது. அதன்பிறகு சிறிது ஏற்றமும், இறக்கமுமாக தங்கம் விலை காணப்பட்டது. நேற்று தங்கம் விலை பவுன் ரூ.39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த அதிரடி விலை ஏற்றம் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக நகை வியாபாரி ஒருவர் தெரிவித்தார். தங்கம் விலை மேலும் அதிகரிப்பதற்கான சூழ்நிலையும் உருவாகி உள்ளது. வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.68.70 ஆக இருந்த வெள்ளி விலை நேற்று ரூ.70.60 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கிலோ ரூ.68,700-ல் இருந்து ரூ.70,600 ஆக அதிகரித்து விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து