முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் பரிசு பொருள்களை ஏலத்தில் எடுத்த சேலத்துக்காரர்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      தமிழகம்
Karthikeyan 2021 12-06

பிரதமரின் பரிசு பொருள்களை ஏலத்தில் எடுத்த சேலத்துக்காரர், பிரதமரின் பரிசு பொருள் தங்களுடைய வீட்டில் இருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனக்கு கிடைக்கும் பரிசுப் பொருள்களை ஆண்டுக்கு ஒரு முறை  ஏல விற்பனை செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் தொகையினை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகிறார். பிரதமர் கலந்து கொள்ளும் பல்வேறு விழாக்களில் கிடைக்கும் பரிசு பொருள்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்படுகிறது. இதை நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏலத்தில் எடுத்து வருகின்றனர். 

இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பழைய இரும்புக் கடை வியாபாரி கார்த்திகேயன், பிரதமருக்கு பரிசாக கிடைத்த திருவள்ளுவர் சிலையையும் பட்டு வேஷ்டிகளையும் 32 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.   ஏலத்தில் எடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் கார்த்திகேயன் வீட்டுக்கே கொண்டு வந்து வழங்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை மற்றும் பட்டு வேஷ்டிகளை பெற்றுக் கொண்ட  அவர் பிரதமர் பயன்படுத்திய பொருள்கள் தமிழகத்தில் குறிப்பாக தனது வீட்டில் இருப்பது பெருமைக்குரியதாக கருதுவதாக தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து